மேஷம் - வார பலன்கள்
பணிகளை திறம்படச் செய்யும் மேஷ ராசி அன்பர்களே!
சனிக்கிழமை பிற்பகல் 3.59 மணி முதல் திங்கட்கிழமை இரவு 8.28 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், கொடுக்கல், வாங்கலில் அதிக கவனம் தேவை. சிலவற்றில் ஏற்படும் தளர்வுகளைச் சமாளிக்க தக்க நபர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். திட்டமிட்ட பணவரவுகள் சரியான நேரத்தில் கிடைத்தாலும், செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். தள்ளி வைத்த வேலை ஒன்றை, உயர் அதிகாரியின் உத்தரவுப்படி உடனடியாக செய்ய வேண்டியதிருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, அவசர வேலைகள் வந்துசேரும். பகல் - இரவு பாராமல் உழைத்து வேலையை முடிப்பீர்கள். கூட்டுத்தொழிலில், போட்டி அதிகரிக்கும். இருப்பினும் வழக்கமான லாபம் குறையாது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினை இருக்கும். கலைஞர்கள், பழைய ஒப்பந்தங்களிலேயே போதுமான வருமானம் பெறுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு நெய்தீபமிட்டு வழிபட்டு வாருங்கள்.