மேஷம் - வார பலன்கள்
சாமர்த்தியமாக வேலை வாங்கும் மேஷ ராசி அன்பர்களே!
தீவிர முயற்சிகளோடு செயல்பட்டு, சில காரியங்களில் சிறப்பான வெற்றிகளைப் பெறுவீர்கள். சில செயல்களில் வெற்றி காண தக்கவர்களின் உதவி பயன்படும். பண வரவுகளைப் பெற அலைச்சல் அதிகமாகும். செலவுகள் கூடும். நண்பர்கள் உதவியினால் நலம் பெருகும். உத்தியோகத்தில், உயரதிகாரிகளின் நல் ஆதரவால் நலம் பல சேரும். சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய நபரின் அவசர வேலையை செய்து கொடுக்க ஓய்வின்றிப் பணிகளில் ஈடுபடுவார்கள். மூலப்பொருட்கள் தட்டுப்பாடு தொல்லைதரும். கூட்டுத்தொழில் வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும், வழக்கமான லாபம் குறையாது. பண சம்பந்தமான பொறுப்பில் உள்ளவர்களால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகள் இருக்கத்தான் செய்யும். கலைஞர்கள், பணிகளில் உற்சாகமாக ஈடுபட்டாலும், வருமானம் குறைவாகவே இருக்கும்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு, சிவப்பு மலர் மாலை சூட்டி வழிபடுங்கள்.