மேஷம் - வார பலன்கள்


மேஷம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 14 April 2023 1:47 AM IST (Updated: 14 April 2023 1:47 AM IST)
t-max-icont-min-icon

சாமர்த்தியமாக பேசி காரியம் சாதிக்கும் மேஷ ராசி அன்பர்களே!

அதிக முயற்சியுடன் செயல்பட்டாலும், சில காரியங்களில் தாமதம் ஏற்படக்கூடும். திடீர் செலவுகள் வந்தாலும், அதனை திறமையுடன் சமாளிப்பீர்கள். அக்கம் பக்கத்தினர் குடும்ப விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஆதாயம் குறைவாக வரலாம் என்று நினைத்த விஷயத்தில் அதிக வருமானம் வந்து மகிழ்வூட்டும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயரதிகாரிகளின் ஆதரவுடன் சில சலுகைகளை அனுபவிப்பார்கள். அதிகப் பொறுப்புகளும், அதனால் செல்வாக்கும் உண்டாகும். எதிர்பார்ப்புகள் தாமதமாகும். சொந்தத் தொழிலில் முயற்சிக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், நிலுவைகளை வசூலிக்க முயற்சி மேற்கொள்வார்கள். கலைஞர்கள் பழைய ஒப்பந்தங்களில் பங்கேற்று போதிய வருமானம் பெறுவர். பங்குச்சந்தையில், அனுபவமிக்க நண்பர்கள் அறிவுரை லாபம் ஈட்டித்தரும்.

பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு, மலர் மாலை சூட்டி அர்ச்சனை செய்யுங்கள்.


Next Story