மேஷம் - வார பலன்கள்
கற்பனை வளத்துடன் காரியங்களில் ஈடுபடும் மேஷ ராசி அன்பர்களே!
தொழில், வியாபாரம் நல்ல முறையிலேயே நடைபெற்று வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடி இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கலாம். உயர் அதிகாரிகளின் அனுசரணையான போக்கு, உங்களுக்கு பெரிதும் துணையாக இருக்கும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் ஓரளவு வளர்ச்சியைக் காண்பார்கள். மூலப்பொருட்களை இருப்பு வைப் பதை தவிர்ப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனையைக் கேட்டு எந்தக் காரியத்தையும் செய்யுங்கள். கலைஞர்கள் சில புதிய வாய்ப்புகளைப் பெற்று மகிழ்வார்கள். சகக் கலைஞர்களின் போட்டிகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தை சுமுகமாக நடத்திச் செல்வதில், பெண்கள் பெரிதும் அக்கறை செலுத்துவார்கள். ஒரு சிலருக்கு ஆரோக்கியத் தொல்லை ஏற்பட்டு மறையும்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை அன்று, சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுங்கள்.