மேஷம் - வார பலன்கள்
முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
குடும்பத்தில் சஞ்சலம் தோன்றலாம். பெண் பிள்ளைகளின் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டிய வாரம் இது. எடுத்த காரியங்களில் சற்று தேக்க நிலை ஏற்படுவது போல தோன்றும்.
அரசியலில் உள்ளவர்கள் தேவையற்ற வழக்குகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பேச்சாளர்கள் மேடையில் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். முயற்சிகள் தள்ளிப்போவதைக் கண்டு குழப்பம் கொள்ள வேண்டாம். முயற்சிகள் பலிக்க தாமதமானாலும், புகழுக்குத் தடை வராது.
நீதித்துறையில் இருப்பவர்களுக்குப் பொறுமையை சோதிக்கக்கூடிய நிகழ்வுகள் நடைபெறும். கலைஞர்கள் சிலர், புதிய வாய்ப்புகளைப் பெற்று மகிழ்வர். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியில் கவனமாக செயல்படுங்கள். சக ஊழியர்களுடன் வீண் வாதம் செய்ய வேண்டாம். தொழில் செய்பவர்கள், லாபம் பெறுவா்.
பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை, சிவாலய வழிபாடு செய்து வந்தால் சங்கடங்கள் விலகும்.