மேஷம் - வார பலன்கள்
வார ராசி பலன்கள் 3.3.2023 முதல் 9.3.2023 வரை
எச்சரிக்கையுடன் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே!
பெரும்பாலான செயல்களில் வெற்றியும், பொருளாதார மேன்மையும் பெறக்கூடிய மகிழ்ச்சியான வாரம் இது. உத்தியோகஸ்தர்கள் செய்யும் பணிகளால், உயர் அதிகாரிகள் பாராட்டும் சந்தர்ப்பம் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் இடையூறு இன்றி நடைபெறும். சொந்தத் தொழிலில் உற்சாகமான சூழல் காணப்படும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மூலப்பொருட்களை அதிகரிக்க முற்படுவீர்கள். பங்குச் சந்தையில் எதிர்பார்க்கும் லாபம் இருக்கும். கலைஞர்கள் புதிய திருப்பத்தைச் சந்திப்பார்கள். சகக்கலைஞர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும். குழந்தைகளின் கல்விக்காகவும், கலை நிகழ்ச்சிக்காகவும் தாராளமாக செலவு செய்யும்படி ஆகலாம். பெண்கள் தங்கள் பணிகளில் கவனமாக இருந்தால் விபத்துக்களை தவிர்க்கலாம்.
பரிகாரம்:- சனிக்கிழமை அன்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வு வளமாகும்.