மேஷம் - வார பலன்கள்
தளராத முயற்சியால் வெற்றிபெறும் மேஷ ராசி அன்பர்களே!
உங்கள் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். எதிர்பார்க்கும் தனவரவு தள்ளிப் போகலாம். உத்தியோகஸ்தர்கள், எதிர்பார்த்த காரியங்கள் நடைபெற சிறிது காலம் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். சகப் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளுங்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். வாடிக்கையாளர்களின் திருப்திக்காக, செய்த வேலையையே மீண்டும் செய்யும்படி ஆகும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் அடிக்கடி தொழில் பற்றி கூட்டாளிகளுடன் ஆலோசனை செய்ய வேண்டியதிருக்கலாம். தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்து வைப்பது நல்லது. குடும்பம் நன்றாக நடந்து வரும். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகளை நடத்த முயற்சிப்பீர்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நவக்கிரக சன்னிதியில் உள்ள சூரியனுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.