மேஷம் - வார பலன்கள்


மேஷம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 21 July 2023 1:18 AM IST (Updated: 21 July 2023 1:22 AM IST)
t-max-icont-min-icon

இரக்க சுபாவம் நிறைந்த மேஷ ராசி அன்பர்களே!

வியாழக்கிழமை பகல் 3.49 மணி முதல் சந்திராஷ்டமம் உள்ளதால் தேவையற்ற நெருக்கடிகள் தேடி வரும். எனவே முக்கிய நபர்களைச் சந்திப்பது, பணம் சம்பந்தமாக கையெழுத்திடுவது போன்றவற்றை தள்ளி வைப்பது நல்லது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் சிறப்பாக முடிந்தாலும், சிறு சிறு தடைகளும், தலைகாட்டும்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலை உயரப்பெறுவார்கள். சக ஊழியர்களின் வேலையில் ஈடுபட்டு பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள், கணக்கு வழக்குகளில் கவனமாக இருங்கள். குடும்பத்தில் பணம் சேரும். பழையப் பொருட்கள் மாற்றத்தில் நவீனமான புதிய பொருட்கள் இடம் பெறும். கலைஞர்கள் தங்கள் துறையில் நல்ல வளர்ச்சி காண்பர். பங்குச்சந்தையில் லாபம் உண்டு.

பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு சிவப்பு மலர் மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.


Next Story