மேஷம் - வார பலன்கள்


மேஷம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 14 July 2023 1:23 AM IST (Updated: 14 July 2023 1:23 AM IST)
t-max-icont-min-icon

பிறரை பார்த்தவுடன் எடைபோடும் மேஷ ராசி அன்பர்களே!

நீங்கள் கசப்பான நிகழ்வுகளைப் பற்றி கவலைப்படமாட்டீர்கள். தோல்வியைக் கண்டு துவளாமல் தீவிர முயற்சியின் மூலம் வெற்றியைத் தேடி முன்னேறுவீர்கள். அதேநேரம் பிறருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகலாம். உயரதிகாரிகள் அலுவல் பணி காரணமாக மிகுந்த பரபரப்புடன் காணப்படுவர். எனவே உத்தியோகஸ்தர்கள் தங்கள் கோரிக்கைகளைத் தற்போது வலியுறுத்தாமல் இருப்பது நல்லது. சொந்தத்தொழில் செய்பவர்கள், பணிகளில் கவனமாக இருப்பது அவசியம். வேலைப்பளு அதிகரிப்பதால் சிறுசிறு தவறுகள் நேருவதை தவிர்க்க இயலாது. கூட்டுத்தொழில் சிறப்பாக நடைபெற்றாலும் எதிர்பாா்த்த லாபம் கிடைக்காது. குடும்பத்தில் சிறுசிறு தொல்லை களைச் சந்திக்க நேரலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்றாலும், எதிர்பார்க்கும் வருமானம் இருக்காது.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு செவ்வரளி மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story