மேஷம் - வார பலன்கள்


மேஷம் - வார பலன்கள்
தினத்தந்தி 7 July 2023 12:33 AM IST (Updated: 7 July 2023 12:34 AM IST)
t-max-icont-min-icon

07-07-2023 முதல் 13-7-2023 வரை

காரியங்களில் வெற்றி காணும் மேஷ ராசி அன்பர்களே!

நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றமான பலன் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் பக்கபலமாக அமையும். சில செயல்களில் குழப்பம் வரும் என்பதால், பணம் சம்பந்தமான வேலைகளைத் தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு, பணிபுரியும் அலுவலகத்திலேயே கிடைக்கலாம். பொறுப்புகள் அதிகமாகும். செல்வாக்கு உயரும். கைகளில் பணப்புழக்கம் இருக்கும்.

சொந்தத்தொழில் செய்பவர்கள், புதிய யுக்தியைக் கையாண்டு பணிகளை விரைவாக முடிப்பர். பண வரவுகளில் திருப்தியான போக்கு காணப்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்படும். கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை ஹயக்ரீவருக்கு துளசி மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபடுங்கள்.


Next Story