< Back
இளைஞர் மலர்
மருத்துவர்களுக்கு பணி
இளைஞர் மலர்

மருத்துவர்களுக்கு பணி

தினத்தந்தி
|
27 April 2023 10:14 PM IST

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி) மூலம் மண்டல உதவி மருத்துவ அலுவலர், பொது மருத்துவ அலுவலர், மருத்துவ அலுவலர் என 1261 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 1-8-2023 அன்றைய தேதிப்படி 32 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 2-8-1991-க்கு முன்பாக பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://upsconline.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-5-2023.

மேலும் செய்திகள்