< Back
இளைஞர் மலர்
இளைஞர் மலர்
விருப்பமான நிறம் எது...?
|1 July 2023 3:58 PM IST
கார்களின் நிறங்கள் குறித்து உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஒவ்வொரு நாட்டினரும் சில குறிப்பிட்ட கலர் கார்களை விரும்பி வாங்குவது தெரிய வந்துள்ளது.
உதாரணமாக, இத்தாலியர்களுக்கு சாம்பல் அல்லது வெளிர் மஞ்சள் நிறக் கார்களே பிடிக்கிறது.
சுவீடன் மக்கள் வெளிர் நீல நிறக் கார்களே கம்பீரமானவை எனக் கருதுகிறார்கள்.
இங்கிலாந்து மக்கள் சிவப்பு, நீலம், வெள்ளை ஆகிய வண்ணக் கார்களை அதிகம் வாங்குகின்றனர்.
அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தினர் சிவப்பு, காக்கி, வெள்ளை மற்றும் நீல நிறக் கார்களை விரும்புகிறார்கள். உயர்தட்டு அமெரிக்கர்கள் இளஞ்சிவப்பு, சாம்பல், சில்வர் வண்ணங்களையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இவை தவிர, ஸ்போர்ட்ஸ் மாடல் கார்கள் ஆழ்ந்த சிவப்பு வண்ணத்தில் இருந்தால் மட்டுமே நன்கு விற்பனையாகிறதாம்.