< Back
இளைஞர் மலர்
ஷாப்பிங் மனோபாவம்
இளைஞர் மலர்

ஷாப்பிங் மனோபாவம்

தினத்தந்தி
|
19 Aug 2023 9:27 AM IST

ஷாப்பிங் செல்வது என்றாலே பெண்கள் குஷியாகிவிடுவார்கள். எவ்வளவு மணி நேரம் ஆனாலும் சரி தாங்கள் விரும்பியதை வாங்கும் வரை மன திருப்தி அடையமாட்டார்கள். கடையில் இருக்கும் அத்தனை பொருட்களையும் அலசி ஆராய்ந்துவிட்டு பிடித்தமானதை தேர்வு செய்வார்கள். ஆனால் ஆண்கள் ஷாப்பிங் விஷயத்தில் இதற்கு எதிர்மாறாக செயல்படும் சுபாவம் கொண்டவர்கள்.

ஷாப்பிங் சென்ற சில நிமிடங்களுக்குள் தங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்துவிடுவார்கள். மனைவியுடனோ, காதலியுடனோ, நெருங்கிய உறவுடனோ ஷாப்பிங் சென்றாலும் சரி ஷாப்பிங் மீதான ஆண்களின் ஆர்வம் சுமார் 26 நிமிடம் வரையே நீடிக்கும் என்கிறது ஒரு ஆய்வு.

நேரம் அதிகரிக்க, அதிகரிக்க சலிப்படைந்துவிடுவார்கள். அரை மணி நேரத்திற்குள் வீட்டிற்கு செல்லும் மனநிலைக்கு வந்து விடுவார்கள் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

மேலும் செய்திகள்