< Back
இளைஞர் மலர்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணி
இளைஞர் மலர்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணி

தினத்தந்தி
|
24 Sept 2023 3:08 PM IST

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) வங்கியில் 439 சிறப்பு அதிகாரி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்சி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

30-4-2023 அன்றைய தேதிப்படி 32 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு சில பதவிகளுக்கு 35 வயது, 38 வயது, 42 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, திருநெல்வேலியில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி: 6-10-2023. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://sbi.co.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

மேலும் செய்திகள்