< Back
இளைஞர் மலர்
இளைஞர் மலர்
10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணி
|2 April 2023 7:07 PM IST
இந்திய உருக்கு ஆணையம் (செயில்) மூலம் ஆலோசகர், மருத்துவ அலுவலர், மேலாண்மை பயிற்சியாளர், உதவி மேலாளர், சர்வேயர், ஆபரேட்டர், சுரங்க போர்மேன், டெக்னீசியன், மைனிங் சர்தார் உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் 244 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணியின் தன்மைக்கேற்ப 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக், எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட படிப்புகள் கல்வி தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஆலோசகர் பணிக்கு 41 வயதும், மருத்துவ அலுவலர் பணிக்கு 34 வயதும், உதவி மேலாளர் பணிக்கு 30 வயதும், மற்ற பணிகளுக்கு 28 வயதும் கல்வி தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வு, திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-4-2023.
மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://www.sailcareers.com என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.