< Back
இளைஞர் மலர்
எய்ம்சில் நர்சிங் வேலை
இளைஞர் மலர்

எய்ம்சில் நர்சிங் வேலை

தினத்தந்தி
|
27 April 2023 10:05 PM IST

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) மூலம் 18 இடங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளில் 3,055 நர்சிங் அதிகாரி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பி.எஸ்சி நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். டிப்ளமோ நர்சிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 5-5-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.

நர்சிங் அதிகாரி ஆட்சேர்ப்புக்கான தகுதித்தேர்வு மற்றும் தகுதி பட்டியல் (மெரிட் லிஸ்ட்) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-5-2023. விண்ணப்ப நடைமுறை பற்றிய மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://aiimsexams.ac.in/ என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம்.

மேலும் செய்திகள்