< Back
இளைஞர் மலர்
ஆயுள் வளர்க்கும் பாதாம், வால்நட்!
இளைஞர் மலர்

ஆயுள் வளர்க்கும் பாதாம், வால்நட்!

தினத்தந்தி
|
29 July 2023 12:46 PM IST

பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடுவது நம் ஆயுளை கூட்டும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடுவது, இதய நோய் மற்றும் புற்றுநோயால் இறக்க நேரிடும் ஆபத்தைக் கணிசமாகக் குறைப்பதாக ஒரு புதிய ஆய்வு சொல்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு நட்ஸ் வகைகளைச் சாப்பிடுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிக காலம் நாம் வாழலாம் என்று 'நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில்' வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.

அமெரிக்காவில் 30 ஆண்டு காலகட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தினமும் ஒரு கையளவு நட்ஸ் வகைகளை சாப்பிடுவதால், எந்த ஒரு காரணத்தாலும் இறப்பதை 20 சதவீதம் என்ற அளவில் குறைக்கலாம் என்கிறது இந்த ஆய்வு.

நட்ஸ் வகைகளை உண்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சராசரியாக சற்றுக் கூடுதலாக உடல்நலன் குறித்து அக்கறையுடன் இருக்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அவர்கள் அதிகம் புகைப்பதில்லை, கூடுதலாக உடற்பயிற்சி செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள் இவை எல்லாம் இந்த ஆய்வு முடிவுகளில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்