< Back
இளைஞர் மலர்
ஆவடியில் பயிற்சி பணி
இளைஞர் மலர்

ஆவடியில் பயிற்சி பணி

தினத்தந்தி
|
14 May 2023 10:00 PM IST

சென்னையை அடுத்த ஆவடியில் இயங்கும் கனரக வாகன தொழிற்சாலையில் (எச்.வி.எப்) அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், எலெக்ட்ரீஷியன் என 168 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சில பணி இடங்களுக்கு ஐ.டி.ஐ. படிக்காமல் 50 சதவீத மதிப்பெண்ணுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கணிதம், அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

14-6-2023 அன்றைய தேதிப்படி 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. மெரிட்லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான நடைமுறைகளை www.avnl.co.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 14-6-2023.

மேலும் செய்திகள்