இரவு வெகுநேரம் கண் விழித்திருக்கிறீர்களா...?
|தூங்காமல் உள்ளவர்களுக்கு இதயநோய், உடல்பருமன் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 30 சதவிகிதம் அதிகரிக்கிறது.
இரவு இரண்டு மணிவரை வீடியோ கேம் விளையாடும் நபரும், புராஜெக்ட் வேலை காரணமாக அதிகாலை தூங்கச்செல்லும் நபரும் இரவில் தூங்காமலிருந்தால் பிரச்சினை ஒன்றுதான். முதலில் உடலின் உற்சாகம் குறையும்; அடுத்ததாக மனச்சோர்வு பிரச்சினைகள் தலைதூக்கும்.
எந்த வேலையும் செய்யாமல் உடலை ஓய்வாக சாய்த்திருப்பதை தூக்கமாக கருதினால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். தூங்கும் நேரம் மட்டுமே உடல் தனது பிரச்சினைகளை சரி செய்து உயிர்ப்பித்துக் கொள்கிறது. தூங்காமல் உள்ளவர்களுக்கு இதயநோய், உடல்பருமன் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 30 சதவிகிதம் அதிகரிக்கிறது.
5 மணிநேரங்களுக்குக் குறைவாக தூங்குபவர்களுக்கு 15 சதவிகித ஆயுள் குறையும். மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் அதிகரித்து ரத்த அழுத்தம் உயருவதால் கண்களின் கீழ் கருவளையம், பைபோலார் டிஸார்டர், குளுக்கோஸ் அளவு குறைவு (இரண்டாம் நிலை நீரிழிவுநோய்), தீராத தசைவலி ஆகியவை தூக்கமிழப்பின் தவிர்க்கமுடியாத அறிகுறிகளாக உருவாகின்றன.