பாலினத்தை கணிக்கும் தொழில்நுட்பம்!
|நகரின் பிரபலமான சாலை ஒன்றில் பைக்கில் செல்கிறீர்கள். அருகிலுள்ள டிஜிட்டல் போர்டு விளம்பரத்தை நீங்கள் பார்க்கும்போது அசைவ உணவு வகைகளும், உங்களுடன் பயணிக்கும் பெண் பார்க்கும்போது அந்த விளம்பரம் மாறி சாக்லெட் வகைகளாக வந்தால் எப்படி இருக்கும்? எதிர்காலம் இப்படித்தான் இருக்கப்போகிறது.
மைக்ரோ கேமராக்கள் மூலம் ஆண்-பெண் பாலினத்தை கணித்து அதற்கேற்ப டிஜிட்டலாக விளம்பரங்களை ஒளிபரப்பும் கலாசாரம் தொடங்கி விட்டது. நார்வேயைச் சேர்ந்த பீட்ஸா நிறுவனம் இத்தகைய விளம்பர முயற்சியைத் தொடங்கியுள்ளது.
தானியங்கியாக ஒருவரை ஆணா, பெண்ணா என கண்டறிந்து அவர்களுக்கு ஏற்ற விளம்பரங்களை ஒளிபரப்பும் இத்தொழில்நுட்பம் சோதனை முறையில் உள்ளது. ஆண்-பெண் மட்டுமல்ல, உடல்மொழி, நடை வேகம் ஆகியவற்றை கணித்து, வயது வாரியாகவும் விளம்பரங்களை ஒளிபரப்பும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்திருக்கின்றன. இதற்காக, சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கொண்டு, பாலின மதிப்பீடும், வயது வித்தியாச மதிப்பீடும் நடைபெற்று வருகிறதாம். ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம், விளம்பரங்களை நபருக்கு நபர் வேறுபடுத்தி, பல விளம்பரங்களை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.