ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்: டெல்லி காவல் துறையில் பணி
|ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் டெல்லி காவல் துறையில் 7,547 காவலர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவின் எந்த பகுதியிலும் வசிக்கும் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 30-9-2023 அன்றைய தேதிப்படி பட்டப்படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
1-7-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. கம்ப்யூட்டர் அடிப்படையிலான எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களிலும், புதுச்சேரியிலும் தேர்வு மையம் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-9-2023. மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://ssc.nic.in/ என்ற இணையப்பக்கத்தை பார்வையிடலாம்.