< Back
வார ராசிபலன்
Weekly Rasi Palan 25.08.2024 to 31.08.2024
வார ராசிபலன்

வார ராசிபலன் 25.08.2024 முதல் 31.08.2024 வரை

தினத்தந்தி
|
25 Aug 2024 6:21 AM IST

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

இந்தவார ராசிபலன்:

மேஷம்

துணிச்சலாக செயல்பட வேண்டிய வாரம் இது. வியாபாரிகள், தொழில்துறையினர் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் மற்றவர்களுடன் பேசுவதில் கவனமாக இருக்கவேண்டும். ரியல்எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவார்கள். கலைத்துறையினர் பலதடை தாமதங்களுக்கு இடையில் பணியாற்ற வேண்டும். பெண்மணிகள் தங்களுடைய பணிகளை சுறுசுறுப்பாக கவனிப்பார்கள். பழைய கடன்கள் அடைந்தாலும் புதிய கடன்கள் ஏற்படும். இந்த வாரம் மற்றவர்களை நம்பி ஒரு காரியத்தில் இறங்கும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களில் இரவு பிரயாணங்களை தவிர்த்து விடவும்.

ரிஷபம்

தடைபட்ட காரியங்கள் வெற்றி தரும் காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகளுக்கு உற்சாகமான வாரம் இது. உத்தியோகஸ்தர்கள் கூடுதல் விடுப்பு எடுத்துக்கொண்டு குடும்ப சுபகாரியங்களில் கலந்து கொள்வார்கள். ரியல்எஸ்டேட், ஷேர்மார்க்கெட் துறையினர் புதிய முதலீடுகளை செய்யும் சூழல் அமையும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளை பெறுவார்கள். பணிபுரியும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான அலுவலகசூழல் ஏற்படும். மனதை வருத்தி வந்த கடன்கள் அடைபடும் வாரம். இல்லத்தரசிகள் குடும்ப சுபகாரியங்களில் பிசியாக இருப்பார்கள். திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களில் புதிய முதலீடு, புதிய விஷயங்களில் ஈடுபடுவது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

ஆதாயங்களை அள்ளித்தரக் கூடிய வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் திட்டமிட்ட ஆதாயங்களை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிட மாற்றம் அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும். நல்ல விஷயங்கள் நடந்தாலும் மனதில் பழைய சம்பவங்கள் குறித்த கவலைகள் ஏற்படும். ரியல்எஸ்டேட், ஷேர்மார்க்கெட் துறையினருக்கு உற்சாகமான காலகட்டம் இது. கலைத்துறையில் இருப்பவர்கள் புதிய தொடர்புகளை பெற்று ஆதாயம் அடைவார்கள். அரசாங்க காரியங்களில் இருந்த தடைகள் விலகும். சிலருக்கு வீடுமனை வாங்ககூடிய யோகம் உருவாகும். மனதில் அவ்வப்போது பல்வேறு வேண்டாத எண்ணங்களின் தாக்கம் ஏற்பட்டு விலகும். அதனால் தெளிவாக முடிவெடுத்த பிறகே எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபட வேண்டும்.

கடகம்

காரிய வெற்றியை தரும் காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய திட்டங்களை செயல்படுத்தலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிபுரிவார்கள். ரியல்எஸ்டேட், ஷேர்மார்க்கெட் துறையினர் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். இந்த வாரம் எந்த ஒரு பணியையும் விடாப்பிடியாக செய்துஜெயிக்க வேண்டும். கலைத்துறையினர் மனதில் புதிய நம்பிக்கைகளை பெறுவார்கள். பெண்மணிகள் சமூக விழாக்களில் கலந்து கொண்டு உற்சாகமாக இருப்பார்கள். புதியவீடு, மனை, நிலம் வாங்குவதற்கு திட்டமிட்டு இருந்தால் அதை சிறிது காலம் தள்ளி வைக்கவும். புதன், வியாழன் ஆகிய இரு நாட்களில் இரவு பயணங்களை தவிர்க்க வேண்டும்.

சிம்மம்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியங்கள் நடைபெறும் காலகட்டம் இது. மனதில் உற்சாகமும், தைரியமும் ஏற்படும். தொழில்துறையினர், வியாபாரிகள் எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். கலைத்துறை அன்பர்கள் புதிய தொடர்புகளை பெற்று உற்சாகம் அடைவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். இல்லத்தரசிகள் குடும்ப சுபகாரியங்களை முன்னிட்டு பல இடங்களுக்கும் சென்று வருவார்கள். பயணங்கள் காரணமாக மனதில் சலிப்பு ஏற்படும். அதனால் நல்ல சந்தர்ப்பங்களை தவறவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கன்னி

இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் முறையாக திட்டமிட்டு செயல்பட வேண்டும். வியாபாரிகள், தொழில்துறையினர் எதிர்பார்த்த ஆதாயங்களை பெறுவதில் தடை தாமதங்கள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்கூடுதலான பொறுப்புகளை ஏற்று செயல்பட வேண்டும். பிரயாணங்கள் மூலம் ஆதாயம் உண்டு. ரியல் எஸ்டேட், ஷேர்மார்க்கெட் துறையினர் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். கலைத்துறையினருக்கு இது ஒரு சாதகமான வாரம். பெண்மணிகள் வெளியிடங்களில் பேசும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரம் ஞாயிறு, திங்கள் ஆகிய இருநாட்களில் இரவு பயணம் செய்வதையும், வெள்ளி, சனி ஆகிய இருதினங்களில்புதிய விஷயங்களில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும்.

துலாம்

மனதில் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் எதிர் பார்த்த லாபத்தை பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ரியல்எஸ்டேட், ஷேர்மார்க்கெட் துறையினர் இந்த வாரம் புதிய முதலீடுகளை செய்யும் வாய்ப்பு உருவாகும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத தடை தாமதங்கள் ஏற்படும். மனதில் பல குழப்பங்கள் இருந்தாலும் செய்யும் பணிகளில் தீர்மானமாக இருந்து அதில் வெற்றி பெற வேண்டும். பெண்மணிகள் குடும்ப சுபகாரியங்களுக்கு அச்சாரம் இடும் பணிகளில் ஈடுபடுவார்கள். மனதில் திடீரென்று ஏற்படும் உற்சாகம் காரணமாக எந்த ஒரு விஷயத்திலும் திட்டமிடாமல் இறங்குவது கூடாது.

விருச்சிகம்

அனைத்து தரப்பினரும் சுறுசுறுப்பாக தங்கள் பணிகளில் ஈடுபடும் வாரம் இது. வியாபாரிகள், தொழில்துறையினர் புதிய முதலீடுகளை செய்யும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று செயல்பட வேண்டும். ரியல்எஸ்டேட், ஷேர்மார்க்கெட் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவார்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த அங்கீகாரத்தை பெற்று மன மகிழ்ச்சியடைவார்கள். அரசாங்க காரியங்களில் ஏற்பட்டு வந்த தடை தாமதங்கள் விலகும். சீருடை பணியாளர்களுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் உண்டு. உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் திடீர் புகழ் பெறும் சூழல் உருவாகும்.நீண்டகால கடன்கள் அடைபடும்.

தனுசு

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கக்கூடிய காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவார்கள். ரியல்எஸ்டேட், ஷேர்மார்க்கெட் துறையினர் புதிய முதலீடுகளை செய்யும் சூழல் ஏற்படும். கலைத்துறை அன்பர்கள் புதிய அங்கீகாரம் கிடைக்கப் பெறுவார்கள். செலவுகளுக்கு ஏற்ற வருமானம் வரும் வாரம் இது. பெண்மணிகள் தங்கள் பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவார்கள். வாழ்க்கைத் துணையோடு சிறு, சிறுகருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அகலும். திங்கள், செவ்வாய் ஆகிய இருநாட்களில் புதிய முயற்சிகள், முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

மகரம்

நிதானமாக திட்டமிட்டு செயல்பட்டு வெற்றிபெற வேண்டிய காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். ரியல்எஸ்டேட், ஷேர்மார்க்கெட் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள். கலைத்துறையினர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வாய்ப்புகளை பெற்று உற்சாகம் அடைவார்கள். இல்லத்தரசிகள் குடும்ப சுபகாரிய விஷயங்களுக்காக பல இடங்களுக்கும் சென்று வருவார்கள். இந்த வாரம் சிறிய விஷயங்களுக்கு கூட அதிக முயற்சிகள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு உண்டு.

கும்பம்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்லமாற்றங்கள் ஏற்படும் காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் உழைப்பிற்கு தகுந்த ஆதாயத்தை பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். ரியல்எஸ்டேட், ஷேர்மார்க்கெட் துறையில் இருப்பவர்கள் இந்த வாரம் புதிய முதலீடுகளை செய்வதை தவிர்க்க வேண்டும். விவசாயதுறையினருக்கு இந்த வாரம் லாபகரமாக இருக்கும். இல்லத்தரசிகள் குடும்ப நலன் கருதி பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்கள். புதிய முதலீடுகள், புதிய விஷயங்களில் ஈடுபடுவதை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும். வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களில் புதிய விஷயங்களில் ஈடுபட வேண்டாம்.

மீனம்

தடைகள் விலகக்கூடிய காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் தாங்கள் மேற்கொண்ட உழைப்புக்கேற்ற பயனை பெறக்கூடிய வாரம் இது. அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பணியிடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். ரியல்எஸ்டேட் மற்றும் ஷேர்மார்க்கெட் துறையினர் திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல லாபத்தை இந்த வாரம் பெற முடியும். மனதை வருத்தி வந்த பழைய கடன்கள் இந்தவாரம் அடைபடும். மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்மணிகள் மன உறுதியோடு செயல்பட்டு காரிய வெற்றி பெற வேண்டும். நீண்ட காலமாக தடைபட்ட விஷயங்கள் நடந்தேறும்.

மேலும் செய்திகள்