வார ராசிபலன் 18.08.2024 முதல் 24.08.2024 வரை
|12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்
இந்தவார ராசிபலன்:
மேஷம்
சுப காரியங்களுக்கு அச்சாரம் இடக்கூடிய காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டிய தருணம் இது. உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்று செயல்பட வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் இறங்கி செயல்படலாம். ஷேர் மார்க்கெட் துறையினருக்கு ஆதாயம் அளிக்கும் வாரம். சினிமா, தொலைக்காட்சி கலைத்துறையினருக்கு எதிர்பாராத ஏற்றங்கள் உண்டு. பெண்மணிகள் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். தேவையற்ற அலைச்சல்கள் இந்த வாரம் ஏற்படும். நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள் வகையில் கவனம் தேவை. செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
ரிஷபம்
புதிய தொடர்புகளால் காரிய வெற்றி அடையும் வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவதில் சிரமம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணி சம்பந்தமான பேச்சுக்களை தவிர மற்ற பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் துறையினர் திட்டமிட்ட ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். அரசியல், அரசு சம்பந்தமான காரியங்களில் அனுகூலம் உண்டு. கலைத்துறையினர் கூடுதலாக முயற்சிகளை மேற்கொண்டு புதிய வாய்ப்புகளை பெற வேண்டும். பெண்மணிகளுக்கு குடும்ப சிக்கல்கள் இருந்தாலும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவார்கள். செலவோடு செலவுகளாக பழைய கடன்களும் இந்த வாரம் திருப்பி செலுத்தப்படும்.
மிதுனம்
மன உறுதியோடு பல விஷயங்களை செய்து முடிக்க வேண்டிய காலகட்டம் இது. தொழில் துறையினர், வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்களுக்கு உரிய மதிப்பு மரியாதையை பெறுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தைப் பெறுவார்கள். அரசு காரியங்களில் அனுகூலமாக அமையும். கலைத்துறையினருக்கு அவர்களே எதிர்பார்க்காத வாய்ப்புகள் வந்து சேரும். இல்லத்தரசிகள் மற்றவர்களை நம்பாமல் தாங்களே களத்தில் இறங்கி செயல்பட வேண்டிய காலகட்டம். வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களில் இரவு பயணங்களை தவிர்க்க வேண்டும்.
கடகம்
எதிர்பார்த்த ஆதாயங்களை பெற்று மகிழ்ச்சியடையும் காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய திட்டங்களில் முதலீடுகளை செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் மனம் மகிழ்ச்சி அடையும் வாரம் இது. பல அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கேற்ற ஆதாயமும் தரும் வாரம் இது. ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் துறையினர் கவனமாக செயல்பட்டால் பெரிய ஆதாயங்களை பெற முடியும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வீட்டு கதவை தட்டும் காலகட்டம் இது. பெண்மணிகள் நீண்ட நாளாக எதிர்பார்த்த சுப நிகழ்ச்சிகளுக்கான அச்சாரம் இந்த வாரம் போடப்படும். வண்டி வாகனங்களுக்கு எதிர்பாராத பராமரிப்பு செலவுகள் உண்டு.
சிம்மம்
தடை தாமதங்களைக் கடந்து திட்டமிட்டு வெற்றி பெற வேண்டிய காலகட்டம் இது. வியாபாரிகள், தொழில்துறையினர் எதிர்பார்த்த ஆதாயங்களை பெறுவதில் தடைகள் உண்டு. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்பாக செயல்படுவார்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகளை பெற்று உற்சாகம் அடைவார்கள். சிறிய விஷயங்களை செய்து முடிப்பதற்கு கூட அதிக பிரயத்தனங்கள் செய்ய வேண்டும். பெண்மணிகள் யாரிடமும் வெளிப்படையாக பேசிவிட வேண்டாம். அரசியல், அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் காரிய அனுகூலம் உண்டு. தொலைபேசி வழி செய்திகள், பிறரை நம்பி முதலீடு செய்வது ஆகியவற்றில் இந்த வாரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கன்னி
சுய திறமை மூலம் தடைகளைத் தாண்டி வெற்றி பெறும் வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவதில் தடைகள் உண்டு. உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய பொறுப்புக்கு ஏற்ப சிறப்பாக பணியாற்றி மதிப்பு பெறுவார்கள். ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினர் இந்த வாரம் புதிய முதலீடுகளை செய்வதை தவிர்க்கவும். பெண்மணிகள் புதிய நபர்களுடன் பழக நேரும் பொழுது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கலைத்துறையினர் இந்த வாரம் நேரடி போட்டிகளை எதிர்கொள்வர். இயன்றவரை வெளியிடங்களில் சாப்பிடாமல் இருப்பதே நல்லது. எந்தஒரு விஷயத்திலும் இறங்குவதற்கு முன்னர் பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும்.
துலாம்
அமைதியான வாரம் இது. தொழில் துறையினர், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டிய காலகட்டம். உங்கள் சுய திறமைகளை வெளிக்காட்டும் வகையில் பல தடை தாமதங்கள் ஏற்படும். காரணம் ஏதும் இல்லாமல் மனதில் சலிப்பு உருவாகும். பெண்மணிகள் சுபகாரிய தடைகளின் காரணமாக மன உளைச்சல் அடைவார்கள். கலைத்துறையினர் என்றோ செய்த முயற்சிகளுக்கு உரிய பலனை பெறக்கூடிய வாரம் இது. அரசியல், அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டு. செலவுகள் அதிகரித்தாலும் அதற்கு தகுந்த பண வரவும் கைகளில் இருக்கும். கஷ்டப்படும் நண்பருக்கு உதவி செய்யும் சூழல் ஏற்படும்.
விருச்சிகம்
நிதானமாகவும், பொறுமையோடும் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் துறையினர் புதிய திட்டங்களில் முதலீடுகளை செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய விஷயமாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். கலைத்துறை அன்பர்கள் எதிர்பாராத இடத்திலிருந்து வாய்ப்புகளை பெறுவார்கள். பழைய கடன்கள் அடைபடும். உடல் நல பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுபவர்கள் நலம் அடைவார்கள். பெண்மணிகள் உற்சாகமாக குடும்ப சுப காரியங்களை முன்னின்று நடத்துவார்கள். இந்த வாரம் புதிய விஷயங்களில் ஈடுபடுவது, புதிய நபர்களை நம்பி முதலீடு செய்வது, வாகனங்களை வேகமாக இயக்குவது, இரவு பிரயாணங்கள், ஜாமீன் கையெழுத்து ஆகிய விஷயங்களை தவிர்த்து விடுவதே நல்லது.
தனுசு
கடந்த கால அனுபவங்கள் மூலம் தடை தாமதங்களை சமாளிக்கும் காலகட்டம் இது. வியாபாரிகள் மற்றும் தொழில் துறையினர் காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் கடமைகளை கண்ணும் கருத்துமாக செய்து வர வேண்டும். ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் துறையினர் இந்த வாரம் சந்தை நிலவரத்தை கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்ப முதலீடுகளை அளவோடு செய்ய வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திடீர் வாய்ப்புகள் கிடைக்கும். இல்லத்தரசிகள் வாழ்க்கைத் துணையோடு வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். அரசு காரியங்களில் அனுகூலம் உண்டு. குடும்ப சுப காரியங்களுக்கு அச்சாரம் இடக்கூடிய காலகட்டம் இது.
மகரம்
பயணங்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும் வாரம். வியாபாரிகள் மற்றும் தொழில்துறையினர் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனக்குறைவாக இருந்தாலும் கூட துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படும் சூழல் ஏற்பட்டுவிடும். ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் துறையினர் இந்த வாரம் புது முயற்சிகளை தவிர்க்க வேண்டும். பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சியான வாரம். செலவுகள் அதிகரித்தாலும் பணத்தை சேமிக்க முடியும். சிறிய விஷயங்களுக்கு கூட அதிக முயற்சிகள் செய்ய வேண்டியதாக இருக்கும். மக்கள் பணியில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சோதனையாக இருக்கும். தடை தாமதங்கள் இருந்தாலும் மனதில் தைரியம் ஏற்படும்.
கும்பம்
புதிய நம்பிக்கைகள் மனதில் உருவாகும் வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் உழைப்புக்கு ஏற்ற ஆதாயத்தை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய பணியிட மாற்றம் அல்லது புதிய வேலை கிடைக்க பெறுவார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் துறையினர் இந்த வாரம் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்கள் புதிய தொடர்புகள் மூலம் நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள். பெண்மணிகள் குடும்ப சுப காரியங்களை முன் நின்று நடத்துவார்கள். அரசியல், அரசு காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்பட்டு விலகும். மனதில் தெய்வ நம்பிக்கை அதிகமாக ஏற்படும் காலகட்டம் இது.
மீனம்
மகிழ்ச்சியான காலகட்டம் இது. தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் தங்களுடைய பழைய கடன்களை தீர்க்கக் கூடிய வாரம் இது. அரசு மற்றும் தனியார் துறை உத்தியோகஸ்தர்களுக்கு இது மகிழ்ச்சி தரும் வாரம். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் பெரிய முதலீடுகளை இந்த வாரம் செய்வதை தவிர்க்கவும். கலைத்துறையில் இருப்பவர்கள் மற்றவர்கள் சொல்வதை நம்பி புதிய விஷயங்களில் ஈடுபட வேண்டாம். வண்டி வாகனங்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத பராமரிப்பு செலவுகள் ஏற்படும். வெளியில் இருந்து வர வேண்டிய பணத்தின் ஒரு பகுதி வந்து சேரும்.