வார ராசிபலன் 15.09.2024 முதல் 21.09.2024
|12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்
இந்த வாரராசிபலன்:
மேஷம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு காரிய வெற்றி பெறவேண்டிய வாரம் இது. வியாபாரிகள் மற்றும் தொழில் துறையினர் விளம்பரங்கள் மூலம் வியாபார விருத்தி பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு தங்களுடைய துறை ரீதியான மரியாதை மற்றும் மதிப்பை பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் சற்று கூடுதலாக உழைத்தால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வழக்கத்தை விட எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். கலைத்துறை மற்றும் மீடியா துறையில் பணிபுரிபவர்கள் அதிகமாக உழைக்க வேண்டும். பெண்மணிகளுக்கு வாரத்தின் முற்பகுதியில் உற்சாகமாகவும், பிற்பகுதியில் மனதில் சலிப்பும் ஏற்படும். இந்த வாரம் புதிய முயற்சி அல்லது புதிய முதலீடுகளை செய்வதை ஒத்தி வைக்க வேண்டும்.
ரிஷபம்
உழைப்பின் மூலம் உயர்வுகளை அடையும் வாரம் இது. மனதில் உற்சாகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் இருந்த இடையூறுகள் நீங்கி உற்சாகம் அடைவார்கள். தொழில் துறையினர் திட்டமிட்ட வெற்றிகளை பெறுவார்கள். வியாபாரிகள் நூதன முறையில் விளம்பரங்களை செய்து புதிய வாடிக்கையாளர்களை கவர வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் கூடுதல் கவனத்தோடு முதலீடுகளை செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெற்று உற்சாகமடைவார்கள். கலைத்துறையினருக்கும் இந்த வாரம் பல நல்ல மாற்றங்களை கொண்டதாக இருக்கும். பெண்மணிகளுக்கு மனதில் விரும்பிய ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் நடப்பதற்கான சூழல் உருவாகும்.
மிதுனம்
எதிர்பார்த்த பண வரவு கையில் வந்து சேரும் வாரம் இது. உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று கவனமாக செயல்பட வேண்டும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். ஒரு சில வியாபாரிகளுக்கு புதிய பங்குதாரர்கள் சேர்க்கை உண்டு. ரியல் எஸ்டேட் துறையினர் புதிய ப்ராஜெக்ட்களை மேற்கொண்டு வெற்றிகரமாக செயல்படுவார்கள். ஷேர் மார்க்கெட் துறையினருக்கு லாபகரமான காலகட்டம். கலைத்துறை, மீடியாவில் இருப்பவர்கள் கவனமாக இருந்தால் நல்ல வாய்ப்புகளை பெற்று தங்களுடைய பெயரை வெளிப்படுத்த முடியும். இல்லத்தரசிகளுக்கு இனிமையான வாரம். இந்த வாரம் வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் இரவு பயணங்களை தவிர்க்க வேண்டும்.
கடகம்
கவனமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறவேண்டிய காலகட்டம் இது. தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் தங்கள் வர்த்தகத்தை பெருக்கும் சூழல் தாமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்பட்டு பணிச்சுமை அதிகமாகும். ஷேர் மார்க்கெட் துறையினர் கவனமாக செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மீடியா மற்றும் கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளை பெற்று மன மகிழ்ச்சி அடைவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் புதிய திட்டங்களை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்துவார்கள். இல்லத்தரசிகளுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை உண்டு.
சிம்மம்
உற்சாகமான வாரம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் இதுவரை சந்தித்து வந்த தடை தாமதங்கள் நீங்கப் பெறுவார்கள். தொழில்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டும். வியாபாரிகள் வியாபார விருத்திக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு சிலர் கடன் வாங்க வேண்டி இருக்கும். ரியல் எஸ்டேட் துறையினர் விளம்பரங்களை செய்வது அவசியம். ஷேர் மார்க்கெட் துறையினர் ரியல் எஸ்டேட் பங்குகளில் லாபம் அடைவார்கள். கலைத்துறையினர் எதிர்ப்புகளை சந்தித்து வெற்றிகளை அடைவார்கள். இல்லத்தரசிகள் குடும்பத்தில் உள்ள நபர்களை அனுசரித்து செல்ல வேண்டும். முக்கியமாக குடும்பத்தில் உள்ள மூத்த பெண் உறுப்பினர்களிடம் எவ்வித கருத்து வேறுபாடும் பாராட்ட வேண்டாம்.
கன்னி
முயற்சிகள் வெற்றிகளை தரும் காலகட்டம் இது. எதிர்பார்த்த தனவரவு இந்த வாரம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடமிருந்து ஒத்துழைப்பு பெறுவார்கள். தொழில்துறையினர் பணியாளர்களை நம்பாமல் தாங்களாகவே களத்தில் இறங்கி செயல்பட வேண்டும். வியாபாரிகள் தொழில் விருத்திக்காக பயணங்களை மேற்கொள்வார்கள். ஷேர்மார்க்கெட் துறையினர் திரவப் பொருள்கள், எண்ணெய் சம்பந்தமான பங்குகள் மூலம் லாபம் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய பங்குதாரர்கள் மூலம் திட்டங்களை மேற்கொள்வார்கள். மீடியா மற்றும் கலைத்துறையினர் தங்களை நிரூபிக்க நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். பெண்மணிகளுக்கு மனதில் ஒருவித சலிப்பு ஏற்பட்டு அகலும்.
துலாம்
பல நாட்களாக இருந்து வந்த தடை தாமதங்கள் விலகி காரிய வெற்றிகள் கைகூடும். வியாபாரிகள் பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெரும் மூச்சு விடுவார்கள். தொழில்துறையினர் தொழில் விரிவாக்க பணிகளில் புதிய திட்டங்களை மேற்கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்று தங்களை நிரூபணம் செய்வார்கள். மீடியா மற்றும் கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெற்று சாதனை புரிவார்கள். ரியல் எஸ்டேட் துறையினருக்கு இந்த வாரம் லாபகரமாக இருக்கும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் கடந்த காலங்களில் இருந்து வந்த மந்த நிலை அகன்று புதிய எழுச்சி பெறுவார்கள். பெண்மணிகள் வழக்கம் போல குடும்ப பொறுப்புகளை ஏற்று செயல்பட வேண்டும்.
விருச்சிகம்
கவனமாக இருந்து காரிய வெற்றி பெற வேண்டிய வாரம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையால் உற்சாக குறைவு அடைவார்கள். தொழில்துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவார்கள். வியாபாரிகளுக்கு அரசு தரப்பு ஆதாயம் உண்டு. கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு உண்டு. ஷேர் மார்க்கெட் துறையினர் தகவல் தொழில்நுட்ப பங்குகள் மூலம் லாபம் அடைவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய வழிகளில் தொழில் முயற்சிகளை மேற்கொள்வார்கள். மீடியா மற்றும் கலை துறையினர் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். இந்த வாரம் புதிய முயற்சிகள் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றையும், வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் இரவு பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
தனுசு
மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும் காலகட்டம் இது. தொழில்துறையினர் இந்த வாரம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்வதை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களால் தடை தாமதங்களை சந்திப்பார்கள். ரியல் எஸ்டேட் துறையினருக்கு இது லாபகரமான வாரம். ஷேர் மார்க்கெட்டில் உள்ளவர்கள் எரிவாயு மற்றும் உணவுத்துறை சம்பந்தமான பங்குகள் மூலம் லாபம் அடைவார்கள். கலைத்துறையினர் மற்றும் மீடியாவில் உள்ளவர்கள் எதிர்பாராத வாய்ப்புகளை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். பெண்மணிகளுக்கு இது லாபகரமான வாரம்.
மகரம்
மன அழுத்தங்கள் அகன்று மகிழ்ச்சி ஏற்படும் வாரம் இது. வியாபாரிகள் கவனமாக செயல்பட்டு புதிய முதலீடுகளை செய்ய வேண்டும். தொழில் துறையினர் புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாக ரீதியான பாராட்டு உண்டு. அரசு பணியில் இருப்பவர்கள் துறை ரீதியான அங்கீகாரம் பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் துறையினர் இந்த வாரம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்க பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினருக்கு இது மகிழ்ச்சிகரமான காலகட்டம். மீடியா மற்றும் கலைத்துறையில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு நல்ல பெயர் வாங்குவார்கள். பெண்மணிகளுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்ப ரீதியாக தடைபட்ட பல சுப காரியங்கள் நடைபெறுவதற்கு இந்த வாரம் அச்சாரம் போடப்படும்.
கும்பம்
மனதில் நம்பிக்கையும், தெம்பும் உருவாகும் காலகட்டம் இது. கலைத்துறை மற்றும் மீடியாவில் இருப்பவர்களுக்கு நல்ல அங்கீகாரம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பணியிட மாற்றம் அல்லது சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரிகள் புதிய கடன் பெற்று தொழில் விரிவாக்கம் செய்வார்கள். தொழில்துறையினர் இந்த வாரம் புதிய வாய்ப்புகளைப் பெற்று மனம் மகிழ்வார்கள். ஷேர் மார்க்கெட் துறையினர் இயற்கை எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய பங்குகள் மூலம் ஆதாயம் அடைவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய முதலீடுகளை மேற்கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்துவார்கள். பெண்மணிகள் மனதில் அமைதி ஏற்படும். தடைபட்ட சுப காரியங்கள் நடைபெறும்.
மீனம்
உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்த காலகட்டம் இது. பெண்மணிகளுக்கு சுபச் செய்திகள் வந்து சேரும். தொழில்துறையினர் புதிய முதலீடுகளை மேற்கொண்டு தொழில் அபிவிருத்தி செய்வார்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள். கலைத்துறை மற்றும் மீடியா துறையினர் இதுவரை சந்தித்த தடை தாமதம் விலகி புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய முதலீடுகள் பெற்று பல திட்டங்களை அறிமுகப்படுத்துவார்கள். ஷேர் மார்க்கெட் துறையினர் ஆயில் மற்றும் பால் பொருள்கள் துறை சார்ந்த பங்குகளில் லாபம் அடைவார்கள். இந்த வாரம் புதிய நபர்களை சந்திப்பது மற்றும் புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.