வார ராசிபலன் 11-08-2024 முதல் 17-08-2024 வரை
|12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்
இந்த வார ராசிபலன்:
மேஷம்
நிதானமாக திட்டமிட்டு காரிய வெற்றி பெறவேண்டிய வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் தங்கள் பொறுப்புகளை தாமதம் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். ஷேர் மார்க்கெட் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசாங்க விஷயங்கள் அனுகூலமாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்பட வேண்டும். உடல் நல பாதிப்புகளுக்கு உடனடியாக தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கு தகுந்த பலன்கள் ஏற்படும்.
ரிஷபம்
பொறுமையோடும், மன உறுதியோடும் இருந்து காரிய வெற்றியை அடைய வேண்டிய காலகட்டம் இது. தொழில்துறையினர், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள் தங்களுடைய பணிகளில் வழக்கத்தை விட கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார முதலீடுகளை செய்வதை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை செயல்படுத்தும் சூழல் ஏற்படும். ஷேர் மார்க்கெட் துறையினர் வழக்கத்தைவிட கவனமாக இருக்க வேண்டும். கலைத்துறையினர் அங்கீகாரம் பெறுவார்கள். பெண்மணிகள் குடும்ப உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். திட்டமிடாத இரவு பயணங்கள், வாகனங்களை ஓட்டுவது, எந்திரங்களை இயக்குவது ஆகிய விஷயங்களில் அனைத்து தரப்பினரும் இந்த வாரம் வழக்கத்தை விட எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மனதில் அமைதியை கடைபிடிக்க வேண்டிய வாரம் இது. பல விஷயங்களில் அலைச்சல் இருந்தாலும் அதற்கான ஆதாயமும் உண்டு. தொழில் துறையினர், வியாபாரிகள் உழைப்பிற்கேற்ற ஆதாயம் பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் துறையினர் புதிய முதலீடுகளை இந்த வாரம் தவிர்க்க வேண்டும். இல்லத்தரசிகளின் மனம் முழுவதும் ஆன்மீக சிந்தனை நிரம்பி இருக்கும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளால் புகழ் பெறுவார்கள். ஆன்லைன் பண பரிவர்த்தனை, தொலைபேசி தகவல்கள் ஆகியவற்றில் இந்த வாரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நண்பர்களுடைய உதவி தகுந்த நேரத்தில் கிடைக்கும். சுப காரியங்களில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள்.
கடகம்
மகிழ்ச்சியான வாரம் இது. பயணங்களால் மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். தொழில்துறையினர், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் அங்கீகாரம் பெறுவார்கள். ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்த ஆதாயம் கை கூடி வரும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் மூலம் மனதில் உற்சாகம் அடைவார்கள். உடல் நலக்கோளாறு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் குணமடையும். குடும்பத்தில் நடக்கவுள்ள சுப காரியங்களை முன்னிட்டு பெண்மணிகள் உற்சாகமாக செயல்படுவார்கள். வீடு, வண்டி வாகனங்களில் பராமரிப்பு செலவு இந்த வாரம் உண்டு. செலவுகளுக்கு ஏற்ற வரவும் இந்த வாரம் இருக்கும்.
சிம்மம்
புது வாய்ப்புகள் வீட்டு கதவை தட்டும் காலகட்டம் இது. மனதில் புதிய தெம்பு ஏற்படும். தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் அங்கீகாரம் அளிக்கப்பட்டு மனம் மகிழ்வார்கள். ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் துறையினருக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. புதிய வாய்ப்புகளைப் பெற்ற கலைத்துறையினர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் காலகட்டம். தடைபட்ட பல சுப காரியங்கள் நிறைவேறும் சூழல் உருவாகும். அரசியல் மற்றும் அரசாங்கம் சம்பந்தமான காரிய அனுகூலம் உண்டு. இல்லத்தரசிகள் தடைபட்ட குடும்ப சுப காரியங்களை முன்னின்று நடத்துவார்கள்.
கன்னி
பிரயாணங்கள் வெற்றிகரமாக அமையும். தொழில் துறையினர், வியாபாரிகள் நேரம் காலம் பார்க்காமல் செயல்பட வேண்டும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும். ஏற்றுமதி - இறக்குமதி துறையினர் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். கலைத்துறையினர் திறமைகளை வெளிப்படுத்தி புகழ் பெறுவார்கள். இல்லத்தரசிகள் குடும்ப விஷயங்கள் குறித்து மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பதை தவிர்க்க வேண்டும். உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு அவை மருத்துவ சிகிச்சையால் குணமாகும். ஒரு சிலருக்கு வீடு மனை, வண்டி வாகனம் ஆகியவை வாங்கக்கூடிய யோகம் உண்டு.
துலாம்
தொடர் முயற்சிகள் வெற்றி தரும் வாரம் இது. வியாபாரிகள் மற்றும் தொழில் துறையினர் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்பு கூடும். ஷேர் மார்க்கெட் துறையினருக்கு லாபகரமான காலகட்டம். கலைத்துறையினர் எதிர்பாராத வாய்ப்புகளால் மகிழ்ச்சி அடைவார்கள். தூர தேசங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயம் ஏற்படும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டலாம். எந்திர பணியாளர்கள், மின்சார பணியாளர்கள், தகவல் தொழில்நுட்ப பணியில் உள்ளவர்கள் தங்களுடைய பணிகளில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். துலாம் ராசியினர் இந்த வாரம் இரவு பயணங்களை தவிர்த்து விடுவதே நல்லது.
விருச்சிகம்
வெளிவட்டார பழக்கவழக்கங்கள் அதிகரிக்கும் காலகட்டம் இது. வியாபாரிகள், தொழில் துறையினருக்கு லாபகரமான வாரம். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமைகள் அதிகரிக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் துறையினர் திட்டமிட்ட ஆதாயத்தை அடைவார்கள். சினிமா, தொலைக்காட்சி போன்றவற்றில் உள்ள கலைத்துறையினர் நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள். பெண்மணிகள் குடும்ப சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவார்கள். மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்களை அடைக்க கூடிய சூழல் உருவாகும். சுப காரியங்கள் நடப்பதற்கு தடையாக இருந்த விஷயங்கள் விலகும். ஒரு சிலர் சமூக விழாக்களில் கலந்து கொண்டு மதிப்பு பெறுவார்கள்.
தனுசு
மனதில் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. வியாபாரிகள் மற்றும் தொழில்துறையினர் திட்டமிட்ட லாபத்தை அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் மதிப்பு பெறுவார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் துறையினருக்கு லாபகரமான வாரம். கலைத்துறையினர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த வாய்ப்புகளை பெறுவார்கள். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் கணக்கு வழக்குகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்வேறு செலவுகளால் பட்ஜெட் எகிறினாலும் பெண்மணிகள் மனதில் மகிழ்ச்சி இருக்கும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் அனுசரித்து செல்ல வேண்டும். அரசாங்கம் மற்றும் அரசியல் சம்பந்தமான பணிகளில் இருந்த காரியத் தடைகள் விலகும்.
மகரம்
காரியத் தடைகள் விலகி மனதில் தெளிவு ஏற்படும் வாரம் இது. தொழில் துறையினர், வியாபாரிகள் நேரம் காலம் பார்க்காமல் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்கால நன்மை கருதி பணியிடத்தில் அமைதி காக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினருக்கு கை கொடுக்கும் வாரம் இது. ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் முதலீடு செய்ய தயாராக இருக்க வேண்டும். தடைப்பட்ட தன வரவுகள் கைகளில் வந்து சேரும். பல விஷயங்களில் ஒன்றுக்கு இரண்டாக அலைந்து திரிந்த பிறகு காரிய வெற்றி கிடைக்கும். தடைபட்ட சுப காரியங்களை நடத்தும் மகிழ்ச்சியில் பெண்கள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.
கும்பம்
மனதில் உறுதி அதிகரிக்கும் காலகட்டம் இது. உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவார்கள். ஒரு சிலர் புதிய வேலை வாய்ப்புகளை பெற்று அமர்வார்கள். தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய முதலீடுகளை திட்டமிட்டு மேற்கொள்வார்கள். அரசு மற்றும் அரசியல் சம்பந்தமான விஷயங்களில் அனுகூலம் உண்டு. சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையினருக்கு மகிழ்ச்சிகரமான காலகட்டம். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் இந்த வாரம் உண்டு. பெண்மணிகள் மனதில் ஒருவித நிம்மதி ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் அமைதி காக்க வேண்டும். வெளிவட்டார பழக்கவழக்கங்களில் ஆதாயம் உண்டு.
மீனம்
துணிச்சலாக செயல்பட்டு காரியசித்தி அடைய வேண்டிய காலகட்டம் இது. உத்தியோகஸ்தர்கள் மற்றும் சீருடை பணியாளர்கள் பணியிடத்தில் மதிப்பு பெறுவார்கள். வியாபாரிகள் மற்றும் தொழில்துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள். ஷேர் மார்க்கெட் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினருக்கு லாபகரமான வாரம் இது. வண்டி வாகனங்கள், வீடு ஆகியவற்றில் எதிர்பாராத பராமரிப்பு செலவுகள் ஏற்படும். பெண்மணிகள் குடும்ப உறவினர்களிடம் அமைதி காப்பது நல்லது. புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்களில் பணம் பரிவர்த்தனை, தொலைபேசி தகவல்கள், திட்டமிடாத பயணங்கள், புதிய நபர்களை நம்பிய காரியத்தில் இறங்குவது ஆகிய விஷயங்களில் மிகவும் கவனமாக யோசித்து செயல்பட வேண்டும்.