< Back
வார ராசிபலன்
வார ராசிபலன் 21-07-2024 முதல் 27-07-2024 வரை
வார ராசிபலன்

வார ராசிபலன் 21-07-2024 முதல் 27-07-2024 வரை

தினத்தந்தி
|
21 July 2024 8:35 AM IST

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

இந்த வார ராசிபலன்:

மேஷம்

முயற்சிகள் வெற்றி தரும் வாரம் இது. தொழில் மற்றும் வியாபார துறையினர் பரபரப்பாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் முக்கியத்துவம் பெறுவார்கள். விவசாயம், ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் ஆகிய துறையினருக்கு லாபகரமான காலகட்டம். தொழில் முயற்சியில் ஈடுபட திட்டமிட்டிருந்த பெண்மணிகளுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். பல விஷயங்களில் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். புதிய நபர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயங்களை தவிர்க்க வேண்டும். ஒரு சிலர் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு தங்கள் பகுதியில் பிரபலம் அடைவார்கள். இந்த வாரம் எதிலும் திட்டமிட்ட பிறகே காரியத்தில் இறங்க வேண்டும்.

ரிஷபம்

உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும் காலகட்டம் இது. வியாபாரிகள், தொழில்துறையினர் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் வழக்கத்தை விட கூடுதலாக பணியில் ஈடுபடும் சூழல் ஏற்படும். கலைத்துறையில் உள்ள பெண்மணிகள் புதிய வாய்ப்புகளை பெற்று பிரபலமடைவார்கள். ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவார்கள். தடை தாமதங்களை சந்தித்த பல நல்ல விஷயங்கள் இந்த வாரம் நடந்தேறும். இருபால் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். அனைத்து தரப்பினரும் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்களில் இரவில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

மிதுனம்

முயற்சிகள் தடைகளைக் கடந்து வெற்றி தரும் வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் எந்த ஒரு விஷயத்தையும் நேரடியாக கண்காணிக்க வேண்டும். தொழில், வியாபார விரிவாக்க முயற்சிகளை சிறிது காலம் ஒத்தி வைக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையில் இருப்பவர்கள் புதிய முதலீடுகளை செய்யக்கூடாது. கலைத்துறையினர் நேரடி போட்டிகளை எதிர்கொள்வார்கள். குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகளில் இல்லத்தரசிகள் தங்கள் கோபத்தை வெளிக்காட்டாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத சுப செலவுகள் ஏற்படும். செலவுகளுக்கு ஏற்ற வரவும் இந்த வாரம் இருக்கும். ஏற்றுமதி, வெளிநாட்டு தொடர்புகள் லாபகரமாக இருக்கும். கல்வித் துறையினர் எதிர்பார்த்த அங்கீகாரத்தை பெறுவார்கள்.

கடகம்

லாபகரமான வாரம் இது. வியாபாரிகள், தொழில் துறையினர் சிரமப்பட நேர்ந்தாலும் அதற்கேற்ற ஆதாயம் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். கலைத்துறையினர் இரவு, பகலாக பாடுபட்டு தங்களை நிரூபிக்க வேண்டும். ரியல் எஸ்டேட், விவசாயம் ஆகிய துறைகளில் எதிர்பாராத லாபம் உண்டு. ஷேர் மார்க்கெட் ஆதாயம் தரும். வெளிநாடுகளிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய தொடர்புகள், நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் உள்ள மின் உபகரணங்களை வழக்கத்தை விட கூடுதல் கவனத்தோடு பயன்படுத்த வேண்டும். திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்களில் இரவு பயணம், அறுவை சிகிச்சை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

சிம்மம்

பொருளாதார ரீதியாக அனுகூலமான காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் லாபகரமாக இருக்கும். மனதில் உள்ள துன்பங்களை வெளிக்காட்டாமல் கடமைகளை செய்ய வேண்டிய வாரம் இது. கலைத்துறையினர் வழக்கத்தை விட கூடுதலாக களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். இல்லத்தரசிகள் உணர்ச்சி வசப்பட்டு எதுவும் பேசி விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செலவுகளுக்கு ஏற்ற பண வரவும் இந்த வாரம் உண்டு. அரசு ஒப்பந்ததாரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வார இறுதி நாட்களில் வண்டி வாகனங்களில் பயணிக்கும் பொழுது கட்டாயம் கூடுதல் கவனம் அவசியம்.

கன்னி

பெரியோர் ஆசிகள் கிடைக்கும் காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் எதிர்பார்த்த பலனை பெற காத்திருக்க வேண்டும். பழைய கடன்களில் பெரும் பகுதியை திருப்பி செலுத்தும் சூழல் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய நபர்கள் தொடர்பினால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சிகள் வெற்றியடையும் வரை அமைதியாக காத்திருக்க வேண்டும். மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் நல்ல ஆரோக்கியம் அடைவார்கள். அரசியல் மற்றும் அரசாங்க காரியங்களில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டு. இல்லத்தரசிகள் உள்ளம் மகிழும் வாரம் இது.

துலாம்

மனதில் புதிய சிந்தனைகள், எண்ணங்கள் உருவாகும் வாரம் இது. தொழில் துறையினர், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டிய காலகட்டம். ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் ஆகிய துறையினர் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இல்லத்தரசிகளுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகமாகும். அரசியல், அரசாங்க விஷயங்களில் எதிர்பார்த்த காரியங்கள் கைகூடிவரும். வாழ்க்கைத் துணையின் கருத்துக்களை காது கொடுத்து கேட்டாலே பல பிரச்சினைகள் தீரும். உறவினர்கள் உங்களுடைய ஆலோசனை கேட்டு பயன்பெறுவார்கள். ஒரு சிலருக்கு வீடு, வீட்டு மனை வாங்கும் யோகம் ஏற்படும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள். அனைத்துத் தரப்பினரும் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்களிலும் இரவு பயணங்களை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்

மனதில் உற்சாகம் ஏற்படும் காலகட்டம் இது. தொழில்துறையினர் புதிய முதலீடுகளை மேற்கொள்வார்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய பணியிட மாற்றம் மற்றும் ஊதிய உயர்வை பெறுவார்கள். கலைத்துறையினர் சாதனை படைப்பார்கள். இருபால் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். முயற்சிகள் எதிர்பாராத வெற்றி தரும். இல்லத்தரசிகளுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும் காலகட்டம் இது. சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். தடைபட்ட பல காரியங்கள் மங்களகரமாக நிறைவேறும். அசையா சொத்து சம்பந்தமான வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

பொருளாதாரம் திருப்திகரமாக உள்ள வாரம். தொழில் துறையினர், வியாபாரிகள் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது அவசியம். கலைத்துறையினர் கடுமையாக உழைக்க வேண்டிய காலகட்டம் இது. ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் எதிர்பார்த்த ஆதாயத்தை தரும். கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் எச்சரிக்கையாக தவிர்க்க வேண்டும். இந்த வாரம் காரிய வெற்றி அடைய தொடர் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். செலவுக்கேற்ற வரவு உள்ள காலகட்டம் இது.

மகரம்

மனதில் உற்சாகம் ஏற்படும் வாரம் இது. தொழில்துறையினர் தடைதாமதங்களுக்கிடையில் புதிய திட்டங்களை செயல்படுத்துவார்கள். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். விவசாயம், ரியல் எஸ்டேட் துறையினருக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. கலைத்துறையினர் புதிய தொடர்புகளால் எதிர்பாராத வாய்ப்புகளை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். இல்லத்தரசிகள் மனதில் உற்சாகம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் சுப காரிய பேச்சுக்கள் நடக்கும். அனைத்து தரப்பினரும் பிசியாக செயல்படுவர். வார இறுதியில் வாகன பயணங்கள், முக்கியமான முடிவுகளை மேற்கொள்வது, பணம் கொடுக்கல் வாங்கல், அறுவை சிகிச்சை ஆகியவற்றில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கும்பம்

விடாமுயற்சியோடு செயல்பட்டு வெற்றி பெறும் வாரம் இது. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில் துறையினர், வியாபாரிகள் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் கணக்கு வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் துணிகர முதலீடுகளை தவிர்க்க வேண்டும். செலவினங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். இல்லத்தரசிகள் பொறுமையோடு அனைத்தையும் சகித்துக் கொண்டு செல்ல வேண்டும். ஒரு சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை திருப்பி செலுத்துவார்கள். திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்களிலும் இரவில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மீனம்

தகவல் தொடர்பு மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும் காலகட்டம் இது. தொழில் துறையினர், வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் ஆதாயம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினர் இந்த வாரம் நிதானமாக சந்தை நிலவரத்தை கவனித்து செயல்பட வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஏற்றுமதி, வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபம் ஏற்படும். திட்டமிட்ட பயணங்கள் மூலம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பொன், பொருள் சேர்க்கை, அசையா சொத்து ஆகியவை கிடைக்கும்.

மேலும் செய்திகள்