வார ராசிபலன் 08.09.2024 முதல் 14.09.2024
|12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்
இந்தவார ராசிபலன்:
மேஷம்
நிதானமாக செயல்பட வேண்டிய காலகட்டம் இது. வியாபாரிகள் மற்றும் தொழில்துறையினர் உழைப்பிற்கு ஏற்ற ஆதாயத்தை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். கலைத்துறையினர் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். பெண்மணிகள் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அரசு தரப்பு காரியங்கள் தாமதமாக நடந்தேறும். இந்த வாரம் புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்
புதிய சிந்தனைகள் மனதில் உருவாகும் வாரம் இது. வியாபாரிகள் மற்றும் தொழில்துறையினர் பழைய கடன்களை அடைப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினருக்கு அரசு சம்பந்தமான காரியங்களில் அனுகூலம் ஏற்படும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் இந்த வாரம் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். பெண்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வைத்தியத்தால் குணமாகும். கலைத்துறையினர் வழக்கத்தைவிட அதிகமாக உழைக்க வேண்டிய காலகட்டம் இது. திருமண விஷயங்களில் சுமுகமான போக்கு ஏற்படும். இந்த வாரம் பொது விஷயங்களில் களம் இறங்கி செயல்படும் சூழல் உருவாகும்.
மிதுனம்
நிதானமாக செயல்பட்டு காரிய வெற்றி அடைய வேண்டிய வாரம் இது. தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் இந்த வாரம் புதிய முதலீடுகளை செய்யக் கூடாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஷேர் மார்க்கெட் துறையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் திறமையை வெளிக்காட்டுவார்கள். பெண்மணிகள் இல்லப் பொறுப்புகளில் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டும். இந்த வாரம் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளையும், வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் இரவு பயணங்களையும் தவிர்க்க வேண்டும்.
கடகம்
முயற்சிகள் வெற்றி தரும் காலகட்டம் இது. தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் திட்டமிட்டு புதிய முதலீடுகளை செய்ய வேண்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் தகவல் தொழில்நுட்ப பங்குகள் மூலம் ஆதாயம் பெறுவார்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் நிதானமாக செயல்பட வேண்டும். பெண்மணிகள் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பல இடங்களுக்கும் சென்று வருவார்கள். குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் நல்ல விதமாக நடந்தேறும். உறவினர்கள் வருகையால் வீடு மகிழ்ச்சிகரமாக காணப்படும்.
சிம்மம்
முன்னரே திட்டமிட்ட காரியங்கள் இந்த வாரம் நடந்தேறும். வியாபாரிகள் மற்றும் தொழில் துறையினர் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் கூடுதல் நெருக்கடி உருவாகும். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் தடைகளை தாண்டி சாதனை புரிவார்கள். இல்லத்தரசிகள் மனதில் உள்ள உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். சமூக அளவில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் காலகட்டம் இது. திருமண விஷயங்களில் இருந்த தடை தாமதங்கள் அகலும்.
கன்னி
பயணங்கள் ஆதாயத்தை தரக்கூடிய வாரம் இது. வியாபாரிகள் மற்றும் தொழில் துறையினருக்கு லாபகரமான காலகட்டம். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் மௌனமாக இருப்பதே நல்லது. ஷேர் மார்க்கெட் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய முதலீடுகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம். கலைத்துறை அன்பர்கள் புதிய தொடர்புகள் மூலம் நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள். பெண்மணிகளுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதை சமாளிக்கும் வகையில் வரவுகளும் உண்டு. அரசு காரியங்களில் எதிர்பார்த்த அனுகூலம் இருக்கும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும்.
துலாம்
பயணங்களால் மனதில் மகிழ்ச்சி கூடும் காலகட்டம் இது. தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பொறுப்புகளில் கவனமாக செயல்பட வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் பல தடைகளுக்குப் பிறகு எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் துறையினருக்கு இது மகிழ்ச்சிகரமான வாரம். கலைத்துறையில் இருப்பவர்கள் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும். பெண்மணிகளுக்கு குடும்ப விஷயங்களில் மன அழுத்தம் ஏற்பட்டு விலகும். இந்த வாரம் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் பொழுது எதிர்கால நன்மைகளை கவனத்தில் கொண்டு நிதானமாக செயல்பட வேண்டும்.
விருச்சிகம்
திட்டமிட்டு நிதானமாக செயல்பட்டு காரிய வெற்றியை அடைய வேண்டிய காலகட்டம் இது. தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகளுக்கு புதிய தொடர்புகளால் நல்ல ஆதாயம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச் சுமையால் மன அழுத்தம் ஏற்படும். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் எதிர்பார்த்த நன்மையை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் துறையினர் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெற்று தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். பெண்மணிகளுக்கு உறவினர்கள் மத்தியில் நல்ல பெயர் ஏற்படும். வாரம் புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதையும், வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் இரவு பிரயாணங்களையும் தவிர்க்கவும்.
தனுசு
துணிச்சலாக பல விஷயங்களை செயல்படுத்த வேண்டிய காலகட்டம் இது. வியாபாரிகள் மற்றும் தொழில்துறையினர் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய முதலீடுகளை செய்யலாம். ஷேர் மார்க்கெட் துறையினர் நிபுணர்களின் ஆலோசனையை பின்பற்றினால் லாபம் அடைவார்கள். கலைத்துறையினர் பல எதிர்ப்புகளுக்கிடையில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவார்கள். இல்லத்தரசிகள் பல்வேறு பொறுப்புகளை ஏற்று செயல்பட வேண்டும். ஒரு சிலர் நண்பர்களுடன் சுற்றுலா செல்வார்கள். இந்த வாரம் புதியதாக மனதில் ஒரு கவலை ஏற்பட்டு வந்தது போலவே அகன்று விடும்.
மகரம்
இந்த வாரம் பல்வேறு சுப காரியங்களில் பங்கேற்று மகிழ்வீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகளுக்கு இது லாபகரமான காலகட்டம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிட மாற்றம் அல்லது வேறு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் வந்து சேரும். ரியல் எஸ்டேட் துறையினருக்கு இது லாபகரமான வாரம். ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. கலைத்துறையினர் வித்தியாசமான சிந்தனைகள் மூலம் வெற்றி பெறுவார்கள். இல்லத்தரசிகள் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். தங்களுடைய மனக்குறைகளை மற்றவர்களிடம் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த வாரம் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு நாட்களில் புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.
கும்பம்
முக்கியமான முடிவுகளை செயல்படுத்த வேண்டிய காலகட்டம் இது. தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று கவனமாக செயல்பட வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் முதலீடுகள் செய்யலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் இந்த வாரம் புதிய முதலீடுகளை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கலைத்துறை அன்பர்கள் கிடைக்கும் சிறிய வாய்ப்பை கூட தவறவிடாமல் பயன்படுத்த வேண்டும். இல்லத்தரசிகள் குடும்ப விஷயங்கள் காரணமாக பல இடங்களுக்கும் பயணம் செல்ல வேண்டியதாக இருக்கும். ஒரு சில பழைய கடன்கள் இந்த வாரம் அடைபடும்.
மீனம்
தகவல் தொடர்புகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரிகள் மற்றும் தொழில்துறையினர் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடம் மாற்றத்தையும் சம்பள உயர்வையும் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஷேர் மார்க்கெட் துறையினர் இந்த வாரம் கவனமாக செயல்பட வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்கள் புதிய தொடர்புகள் கிடைக்கப்பெற்று முன்னேற்றம் அடைவார்கள். இல்லத்தரசிகளுக்கு வாழ்க்கைத் துணையோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அகலும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். இந்த வாரம் செலவுகளுக்கு ஏற்ற வரவும் உண்டு.