வார ராசிபலன் 01-09-2024 முதல் 07-09-2024 வரை
|12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்
இந்த வார ராசிபலன்:
மேஷம்
தடைகளைக் கடந்து வெற்றி தரும் வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் எந்த விஷயத்தையும் நேரடியாக கண்காணிக்க வேண்டும். தொழில், வியாபார விரிவாக்க முயற்சிகளை சிறிது காலம் ஒத்தி வைக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையில் இருப்பவர்கள் புதிய முதலீடுகளை இந்த வாரம் செய்ய வேண்டாம். கல்வித் துறையினர் எதிர்பார்த்த அரசு அங்கீகாரம் பெறுவார்கள். கலைத்துறையினர் நேரடி போட்டிகளை எதிர்கொண்டு வெல்வார்கள். குடும்ப சச்சரவுகளில் இல்லத்தரசிகள் கோபத்தை வெளிக்காட்டாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத சுபச் செலவுகள் ஏற்படும். செலவுகளுக்கு ஏற்ற வரவும் உண்டு. ஏற்றுமதி, வெளிநாட்டு தொடர்புகள் லாபகரமாக இருக்கும்.
ரிஷபம்
முயற்சிகள் வெற்றி தரும் காலகட்டம் இது. வியாபாரிகள், தொழில் துறையினர் சிரமப்படுவதற்கேற்ற ஆதாயம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். கலைத்துறையினர் காலநேரம் பாராமல் பாடுபட்டு தங்களை நிரூபிக்க வேண்டிய சூழல். ரியல் எஸ்டேட், விவசாயம் ஆகிய துறைகளில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. ஷேர் மார்க்கெட் ஆதாயம் தரும். வெளிநாடுகளிலிருந்து எதிர்பார்த்த நற்செய்திகள் வந்து சேரும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம், பணியிட மாற்றம் உண்டு. புதிய தொடர்புகள், நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும். இல்லத்தரசிகளுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகமாகும். இந்த வாரம் வீட்டில் உள்ள மின் உபகரணங்களை கூடுதல் கவனத்தோடு பயன்படுத்த வேண்டும்.
மிதுனம்
பயணங்கள் நன்மை தரக்கூடிய காலகட்டம் இது. வியாபாரிகள், தொழில்துறையினர் புதிய முதலீடுகளை சிறிது காலம் ஒத்தி வைக்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க வேண்டும். ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையில் உள்ளவர்கள் திட்டமிட்ட வெற்றி அடைவார்கள். அரசியல் மற்றும் அரசாங்க காரியங்களில் அனுகூலம் உண்டு. கல்வித்துறையினர் அங்கீகாரம் பெறுவார்கள். இல்லத்தரசிகள் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். மனதில் இருந்த தயக்கங்களை அகற்றி விட்டு காரியத்தில் இறங்கி வெற்றி பெறும் மன உறுதி ஏற்படும்.
கடகம்
கூடுதல் பொறுப்புகளை ஏற்று செயல்பட வேண்டிய வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் உழைப்பிற்கு ஏற்ற ஆதாயம் அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் அங்கீகாரம் பெறுவார்கள். ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினர் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களை இந்த வாரம் தவிர்க்க வேண்டும். கலைத்துறையில் உள்ளவர்கள் நல்ல வாய்ப்புகளை பெற்று மகிழ்ச்சியடைவார்கள். பெண்மணிகள் மனதில் மகிழ்ச்சி நிலவும். புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டு. நீண்ட கால மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. இந்த வாரம் புதன், வியாழன் ஆகிய இரு நாட்களும் இரவு பயணங்களை தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சுறுசுறுப்பாக காரியத்தில் இறங்கி வெற்றியடையும் காலகட்டம். வியாபாரிகள் மற்றும் தொழில் துறையினர் மக்களிடையே அங்கீகாரம் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு பாராட்டு பெறுவார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் துறையில் உள்ளவர்கள் கவனமாக இருந்து எதிர்பார்த்த லாபத்தை அடைய வேண்டும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளுக்காக நேரம் காலம் பார்க்காமல் காத்திருக்க வேண்டும். அரசு தரப்பில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். குழந்தைகள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் பெறுவார்கள். இல்லத்தரசிகள் குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் எதார்த்தமாகக்கூட பேசி விட வேண்டாம்.
கன்னி
பிரயாணங்களால் ஆதாயம் ஏற்படும் காலகட்டம் இது. தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் வளர்ச்சி பெற கூடுதல் விளம்பரங்களை செய்ய வேண்டும். உத்தியோகஸ்தர்கள் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் துறையினர் புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் அடைவார்கள். கலைத்துறையினர் தங்களுடைய கடும் முயற்சிகளுக்குப் பிறகு வாய்ப்பு பெறுவார்கள். பெண்மணிகள் குடும்ப பெரியவர்களிடம் தங்களுடைய சிக்கல்களை தெரிவித்து ஆலோசனை பெற வேண்டும். அரசாங்க பணியை எதிர்பார்த்து இருந்த ஒரு சிலருக்கு நல்ல செய்தி வந்து சேரும். திருமண விஷயங்களில் இருந்த தடை தாமதங்கள் விலகும்.
துலாம்
இந்த வாரம் மகிழ்ச்சியான வாரம் என்று குறிப்பிடலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு சில நல்ல விஷயங்கள் நடந்திருக்கும். தொழில் துறையினர், வியாபாரிகள் தங்களது முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றி உண்டு. உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தியை அடைவார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் துறையில் இருப்பவர்கள் சற்று முயற்சி செய்தால் எதிர்பார்த்த ஆதாயத்தைப் பெறலாம். கலைத்துறையில் இருப்பவர்கள் நேரடியாகவே போட்டிகளை எதிர்கொண்டு வெல்ல வேண்டும். இல்லத்தரசிகள் வழக்கம் போல் தங்களுடைய பணிகளை மட்டுமே கவனிக்க வேண்டும். ஒரு சில விஷயங்களில் நீண்ட காலமாக இருந்த தடை தாமதங்கள் விலகும்.
விருச்சிகம்
தடைபட்டிருந்த பல்வேறு சுப காரியங்கள் மங்களகரமாக நடந்தேறும் காலகட்டம் இது. வியாபாரிகள் மற்றும் தொழில்துறையினர் தங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற பலன்களை கூடுதலாகவே பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் தங்களுடைய சக ஊழியர்களுடைய ஆதரவை பெறுவார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் துறையில் இருப்பவர்கள் புதிய திட்டங்களில் ஈடுபட்டு ஆதாயம் பெறுவார்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் பல தடை தாமதங்களுக்குப் பிறகு நல்ல வாய்ப்பை பெறுவார்கள். பழைய கடன்கள் அடைபடும். உடல் நல பாதிப்புகளுக்கு மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான வாரம் இது.
தனுசு
புதிய சிந்தனைகள் மனதில் எழக்கூடிய காலகட்டம் இது. தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய வாரம் இது. ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் துறையினர் அரசு சம்பந்தமான ஒப்பந்தங்களை மற்றும் பங்குகளை பெற்று ஆதாயம் அடைவார்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் வராது என்று நினைத்த வாய்ப்பைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். செலவுகள் அதிகம் இருந்தாலும் இந்த வாரம் அதற்கு ஏற்ற வரவும் இருக்கும். புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் இரவு பயணங்களை தவிர்க்க வேண்டும். இந்த வாரம் வழக்கமான விஷயங்களில் கூட கவனமாக செயல்படுவது அவசியம்.
மகரம்
மன அழுத்தங்கள் விலகக் கூடிய காலகட்டம் இது. தொழில் துறையினர், வியாபாரிகள் திட்டமிட்ட லாபத்தை பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு மேலதிகாரிகள் பாராட்டை பெறுவார்கள். ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினர் இந்த வாரம் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். கலைத்துறையினர் சிக்கல்களைச் சந்தித்து புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். எதிர்பாராத சமயங்களில் நண்பர்களுடைய உதவி கிடைக்கும். இல்லத்தரசிகள் பல்வேறு பொறுப்புகளை ஏற்று செயல்பட கவனமாக வேண்டும். அரசு காரியங்களில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். குடும்ப ரீதியான சுப காரியங்களுக்கு அச்சாரம் போடக்கூடிய காலகட்டம் இது.
கும்பம்
மனதில் புதிய நம்பிக்கைகள் உருவாகும் வாரம் இது. தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களை பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிட மாற்றம் அல்லது பணி உயர்வு பெறுவார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் துறையினர் திட்டமிட்ட வெற்றி பெறுவார்கள். கலைத்துறையினர் கலகலப்பான வெற்றியை அடைவார்கள். பெண்மணிகள் மனதில் புதிய தெம்பு தோன்றும். சனி வக்ர கதி நீங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. அதுவரை புதிய முயற்சிகளில் தடை தாமதங்கள் இருக்கும். ஆண், பெண் இருவரும் புதிய நபர்களிடம் இந்த வாரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மீனம்
தடைபட்ட காரியங்களில் வெற்றி பெறக்கூடிய வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் தங்கள் ஊழியர்களை அனுசரித்து செல்ல வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் அனுகூலமாக இருப்பார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் புதிய திட்டங்களை மேற்கொள்ளலாம். ஷேர் மார்க்கெட் துறையினர் அரசு துறை பங்குகளில் கவனம் செலுத்த வேண்டும். ஆண்கள் பெண் நண்பர்களுடைய விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டிய வாரம். அரசாங்க விஷயங்களில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். பெண்மணிகளுக்கு மனதில் புதிய உற்சாகம் ஏற்படும். ஒரு சிலருக்கு வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டு.