< Back
வானிலை
வானிலை
தமிழகத்தில் உக்கிரம் காட்டும் வெயில்.. 8 இடங்களில் சதமடித்தது
|16 Sept 2024 10:50 PM IST
தமிழகத்தில் இன்று 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
சென்னை,
வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. எனினும், ஒருசில பகுதிகளில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவுக்கு சில இடங்களில் அனல் காற்று வீசியது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தமிழகத்தில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி வெயில் பதிவான இடங்கள்;
* மதுரை - 105 டிகிரி பாரன்ஹீட்
* நாகப்பட்டினம் - 104 டிகிரி பாரன்ஹீட்
* ஈரோடு - 102 டிகிரி பாரன்ஹீட்
* தஞ்சாவூர் - 102 டிகிரி பாரன்ஹீட்
* சென்னை - 101 டிகிரி பாரன்ஹீட்
* கரூர் - 101 டிகிரி பாரன்ஹீட்
பாளையங்கோட்டை - 100 டிகிரி பாரன்ஹீட்
* பரங்கிப்பேட்டை - 100 டிகிரி பாரன்ஹீட்