< Back
வானிலை
தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் கனமழை
வானிலை

தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் கனமழை

தினத்தந்தி
|
30 Sept 2024 2:32 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி,

உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

அம்மாவட்டத்தின் திருச்செந்தூர், பரமன்குறிச்சி, உடன்குடி, மெஞ்ஞானபுரம், குலசை, காயல்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

பலத்த காற்றுடன் பெய்துவரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்