< Back
வானிலை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வானிலை

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
3 Sept 2024 10:52 AM IST

வங்கக்கடலில் வரும் 5-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் வரும் 5-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு வாரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்