காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
|சென்னையில் பல்லாவரம், கிண்டி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் மித அளவிலான மழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மாநிலத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னையில் பல்லாவரம், கிண்டி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மித அளவிலான மழை பெய்து வருகிறது. இதனால், அந்த பகுதிகளில் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.