< Back
வானிலை
தமிழகத்தில்  15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வானிலை

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
7 Oct 2024 4:32 AM IST

"தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 15 மாவட்டங்களில் திங்கள்கிழமை (அக்.7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- தெற்கு ஆந்திரம் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு திசைக்கு இடைப்பட்ட வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் வரும் 11-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. .

நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகா், கன்னியாகுமரி, ஈரோடு, தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்