< Back
வானிலை
4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம் 

வானிலை

4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
3 Oct 2024 8:04 AM IST

தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மாலத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 8-ந்தேதி வரை மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்