< Back
வானிலை
வானிலை
11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
|3 Sep 2024 2:14 AM GMT
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், 11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, கோவை, நீலகிரி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.