< Back
வானிலை
3 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வானிலை

3 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
18 Aug 2024 10:47 AM IST

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 23-ம் தேதி வரை சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்