< Back
வானிலை
தமிழகத்தில் 14  மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
வானிலை

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
15 Aug 2024 6:43 AM IST

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை காஞ்சிபுரம் மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்