< Back
வானிலை
வானிலை
அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
|1 Oct 2024 4:57 PM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
சென்னை ,
குமரிக்கடல் மற்றும் உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
அதன்படி, கோவை, நீலகிரி, தேனி திண்டுக்கல் , மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருச்சி, கரூர் , தென்காசி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் , மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .