< Back
வானிலை
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
1 Sept 2024 2:26 PM IST

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இன்று ஒருசில பகுதிகளில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், அதிகபட்சமாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்