< Back
வானிலை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
வானிலை

9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

தினத்தந்தி
|
12 Aug 2024 7:26 AM IST

மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது:

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 கி.மீவேகத்தில் பலத்த தரை காற்றுடன், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலுார், பெரம்பலுார், அரியலுார் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்யலாம். இதற்கான மஞ்சள், 'அலெர்ட்' விடுக்கப் பட்டுள்ளது.நாளை கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த, 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்