< Back
வானிலை
தமிழகத்தின் 6 இடங்களில் சதமடித்த வெயில்
வானிலை

தமிழகத்தின் 6 இடங்களில் சதமடித்த வெயில்

தினத்தந்தி
|
30 July 2024 5:10 PM GMT

தமிழ்நாட்டில் இன்று 6 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது,

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. எனினும், சில இடங்களில் வெயிலும் கொளுத்தி வருகிறது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள்:

* நாகப்பட்டினம் - 102.2 டிகிரி பாரன்ஹீட்

* மதுரை விமான நிலையம் - 101.5 டிகிரி பாரன்ஹீட்

* பரங்கிப்பேட்டை - 101.3 டிகிரி பாரன்ஹீட்

* கடலூர் - 101.1 டிகிரி பாரன்ஹீட்

* தஞ்சாவூர் - 100.4 டிகிரி பாரன்ஹீட்

* வேலூர் - 100 டிகிரி பாரன்ஹீட்

மேலும் செய்திகள்