< Back
வானிலை
வானிலை
தமிழகத்தின் 5 இடங்களில் சதமடித்த வெயில்
|5 Sept 2024 9:57 PM IST
மதுரை விமான நிலையம் பகுதியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
சென்னை,
வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இன்று தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
தமிழகத்தில் இன்று வெயில் சதமடித்த இடங்கள்;
* மதுரை விமான நிலையம் - 105.44 டிகிரி பாரன்ஹீட்
* மதுரை நகரம் - 103.64 டிகிரி பாரன்ஹீட்
* நாகப்பட்டினம் - 102.38 டிகிரி பாரன்ஹீட்
* தஞ்சாவூர் - 102.2 டிகிரி பாரன்ஹீட்
* திருச்சி - 100.94 டிகிரி பாரன்ஹீட்