< Back
வாஸ்து நாட்கள்
மனைகளின் பெயரும் அவை தரும் சுப பலன்களும்…
வாஸ்து நாட்கள்

மனைகளின் பெயரும் அவை தரும் சுப பலன்களும்…

தினத்தந்தி
|
25 Sept 2024 7:50 AM IST

மனைகளுக்கு பழங்காலத்தில் வழங்கப்பட்ட பெயர்களில் சுப பலன்களை தரக்கூடியவை குறித்தும், அவற்றின் அமைப்பு குறித்தும் இங்கு பார்க்கலாம்.

வாஸ்து சாஸ்திர ரீதியாக பழங்காலத்தில் ஒரு மனையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்த மனைக்கு பல்வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அந்த பெயர்களின் அடிப்படையில் அந்த மனை தருகின்ற நற்பலன்களை சுலபமாக தெரிந்து கொள்ள முடிகிறது.

அந்த வகையில் மனைகளுக்கு பழங்காலத்தில் வழங்கப்பட்ட பெயர்களில் சுப பலன்களை தரக்கூடியவை குறித்தும், அவற்றின் அமைப்பு குறித்தும் இங்கு பார்க்கலாம்.

•மேற்கு பகுதி உயரமாகவும், கிழக்கு பகுதி தாழ்வாகவும் உள்ள மனை கோவீதி என்றும், வளர்ச்சி தருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

•தெற்கு உயரமாகவும் வடக்கு தாழ்வாகவும் உள்ள மனை கஜவீதி என்றும் அது செல்வ வளர்ச்சி தருமென்றும் குறிப்பிடப்பட்டது.

•தென்கிழக்கு பாகம் உயரமாகவும், வடமேற்கு தாழ்வாகவும் உள்ள மனை நாகவீதி என்றும் அது உயர்வை தருவதாகவும் சொல்லப்பட்டது.

•தென்மேற்கு உயரமாகவும், வடகிழக்கு தாழ்வாகவும் உள்ள மனை தனவீதி என்றும் அது மங்கலம் தருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

•கிழக்கு, தென்கிழக்கு உயரமாகவும், மேற்கு, வடமேற்கு தாழ்வாகவும் உள்ள மனை பைதாமஹ என்றும், அது சுப பலன்களை தருவதாகவும் சொல்லப்பட்டது.

•தெற்கு, தென்கிழக்கு உயரமாகவும், வடக்கு, வடமேற்கு தாழ்வாக அமைந்துள்ள மனை ஸுபதம் என்றும் அது உயர்ந்த பலன்களை தருவதாகவும் சொல்லப்பட்டது.

•தென்மேற்கு, தெற்கு உயரமாகவும், வடக்கு, வடகிழக்கு தாழ்வாகவும் உள்ள மனை தீர்க்காயுஸ் என்றும் நன்மை தருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

•மேற்கு, தென்மேற்கு உயரமாகவும் கிழக்கு, வடகிழக்கு தாழ்வாகவும் உள்ள மனை புண்யகம் என்று சுபம் தருவதாக சொல்லப்பட்டது.

•தென்கிழக்கு உயரமாகவும் தென்மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு ஆகியவை தாழ்வாக உள்ள மனை ஸ்தாவரம் என்றும், அது சுபம் தருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

•தென்மேற்கு உயரமாகவும், தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு ஆகியவை தாழ்வாகவும் உள்ள மனை ஸ்தண்டிலம் என்றும் அது சுபம் தருவதாகவும் சொல்லப்பட்டது.

கட்டுரையாளர்: சிவகிரி ஜானகிராம்

செல்: 9962077412

மேலும் செய்திகள்