< Back
தேசிய செய்திகள்
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை- அதானி குழுமம் விளக்கம்
தேசிய செய்திகள்

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை- அதானி குழுமம் விளக்கம்

தினத்தந்தி
|
21 Nov 2024 1:26 PM IST

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என்று அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

சூரிய மின் சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் சுமார் 265 மில்லியன் டாலர்களை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு வழங்க ஒப்புக்கொண்டதாக அந்த ஆணையம் முன்வைத்த குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை அடுத்து அதானிக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதானி நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அவரது நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

இந்திய அரசியலிலும் அதானி மீதான குற்றச்சாட்டு பெரும் புயலை கிளப்பியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், தங்கள் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவில் வைக்கப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகளை அதானி நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பாக அதானி நிறுவனம் கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா நிரூபிக்கும் வரை நாங்கள் நிரபராதிதான்" என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்