< Back
மத்திய பட்ஜெட் - 2023
உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன - ஜனாதிபதி உரை
மத்திய பட்ஜெட் - 2023

உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன - ஜனாதிபதி உரை

தினத்தந்தி
|
31 Jan 2023 1:07 PM IST

கொரோனா காலத்தில் மக்கள் பசியாற பிரதமர் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது.

புதுடெல்லி,

ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கும் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

* ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது,.

* ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பெரும்பாலான ஏழை மக்கள் பயன்பெறுவார்கள்.

*கொரோனா காலத்தில் மக்கள் பசியாற பிரதமர் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது.

* நவீனத்துவம் மூலம் மக்களை அணுகுவதால் இந்த திட்டத்திங்கள் அனைவரையும் சென்றடைகின்றன.

* வளர்ச்சி அடையாத பகுதிகள் மீது தனி கவனம் செலுத்தப்படுகிறது.

* பிரதமரின் கரீம் கல்யாண் யோஜனா திட்டத்தை முன்னெடுத்து செல்ல அரசு முடிவு எடுத்துள்ளது.

* பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட சமூகத்தின் ஆசைகளை நிறைவேற்றும் அரசு.

* விவசாயிகள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

* மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

* நாட்டில் 100க்கும் மேற்பட்ட வளர்ச்சி அடையாத மாவட்டங்கள் இருந்தன.

* நாட்டின் வளர்ச்சி அடையாமல் இருந்த மாவட்டங்கள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.

* எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ன.

* எல்லை பகுதிகளில் நிலவிய நக்சல் இயங்களில் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

* அரசின் மக்கள் நலன் திட்டங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைந்துள்ளது.

* அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் நோக்கம்.

* நாட்டின் சுதந்திரத்திறாக பாடுபட்ட தியாகிகளின் பெயர்கள் 21 அதமான் தீவுகளுக்கு வைக்கப்பட்டது.

* சுயசார்பு திட்டம் நாட்டு மக்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

* அனைத்து விதமான அடிமைத்தனங்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி

* இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது.

* உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன.

* புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது அரசு 81-வது இடத்தில் இருந்து 40-வது இடத்திற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,

* விளையாட்டு துறையில் திறமையானவர்களை ஊக்குவிக்க கேலோ இந்தியா திட்டம்.

* 200 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* அதிகமான மருத்துவக்கல்லூரிகளால் மருத்துவ படிப்புக்கான இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.

* கிராம மக்களுக்கு வேலை, மருத்துவ வசதி உலக வங்கி அமைப்பு தெரிவித்துள்ளது.

* அதி வேக வளர்ச்சி அடைந்து வரும் நாட்டின் விமானப்படை

* நாட்டின் மிகப்பெரிய ரெயில் நிலையங்கள் நவீனத்துவம் பெற்றுகின்றன.

* திருவள்ளூவர், ஆதிசங்கரர், குருநானக் ஆகியோரின் வழியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்