உலக நாடுகள் பாராட்டும் வகையில் இந்திய பொருளாதாரம் - நிர்மலா சீதாராமன்
|சுதந்திர இந்தியாவின் 75-ப்வது ஆண்டில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று 2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் என்பதால் சலுகைகள் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறதில் அதில்,
* சுதந்திர இந்தியாவின் 75-ப்வது ஆண்டில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
* உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா விளங்குகிறது.
* இந்தியப் பொருளாதாரம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது
* விவசாயிகள், இளைஞர்கள், இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பட்ஜெட். அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பட்ஜெட்.
* இந்தியா பொருளாதாரம் சிறப்பாக இருப்பதை உலக நாடுகளே ஒப்புக்கொண்டுள்ளன. நடப்பாண்டில் இந்தியா 7 சதவிகித பொருளாதார வளர்ச்சியை காணும். மற்ற நாடுகளை விட இது அதிகம்.
* கடந்த பட்ஜெட்டுகள் அமைத்த அடித்தளத்தின் மீது கட்டப்படும் பட்ஜெட் ஆக இது அமையும்.
* உலக நாடுகள் பாராட்டும் வகையில் இந்திய பொருளாதாரம் உள்ளது.
* உலகளாவிய சவால்கள் இருக்கும் இந்நேரத்தில், ஜி20 தலைமையை இந்தியா ஏற்றது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது