தமிழ் சினிமாவின் வித்தியாசமான சைக்கோ-திரில்லர் படம்: 'பட்டாம்பூச்சி' படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு, சுந்தர் சி, ஜெய் நடிப்புக்கு குவியும் பாராட்டு
|பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ரிலீஸ் செய்யப்பட்ட 'பட்டாம்பூச்சி' படத்துக்கு, தமிழ் சினிமாவின் வித்தியாசமான சைக்கோ-திரில்லர் படம் என ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்துள்ளனர்.
அவ்னி டெலி மீடியா சார்பில் குஷ்பு தயாரிப்பில் பத்ரி எழுதி இயக்கியுள்ள படம் 'பட்டாம்பூச்சி' படம் திரைக்கு வந்திருக்கிறது. இந்த படத்தில் சுந்தர் சி, ஜெய், அனிரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானசா உள்பட பலர் நடித்துள்ளனர். சைக்கோ-திரில்லர் படமாக உருவாகியுள்ள 'பட்டாம்பூச்சி' படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
இதுகுறித்து 'பட்டாம்பூச்சி' படத்தின் டைரக்டர் பத்ரி கூறியதாவது:-
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 'பட்டாம்பூச்சி' படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் வித்தியாசமான சைக்கோ-திரில்லர் படமான 'பட்டாம்பூச்சி' படத்துக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்துள்ளனர். இதுவரை கதாநாயகனாக மட்டுமே பார்த்து ரசித்த ஜெய், முதன் முறையாக இந்த படத்தில் கொடூர சைக்கோ வில்லனாக மிரட்டியுள்ளார். அவரது மிரட்டலான நடிப்பு ரசிகர்களை உறைய செய்துள்ளது. அதேபோல மிடுக்கான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சுந்தர் சி பட்டையை கிளப்பியுள்ளார்.
இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைலருக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு இந்த படத்தின் மீதான பெரிய நம்பிக்கையை அளித்தது. அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது. தொழில்நுட்ப வசதியில்லாத காலத்தில் ஒரு சைக்கோ கொலையாளியை போலீசார் எப்படி 'சேஸ்' செய்கிறார்கள்? அதை அந்தக் கொலையாளி எவ்வாறு எதிர்கொண்டு தப்புகிறான்? முடிவு என்ன? இது எல்லாமே திருப்பம் நிறைந்த காட்சிகளாக படமாக்கி இருக்கிறோம். யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களுக்கு விருந்து.
இந்த படம் நிச்சயம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாக இருக்க போகிறது. சைக்கோ திரில்லர் ரக பட ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் இந்த படம் மாறுபட்ட ஒரு அனுபவத்தை தரும். இந்த படத்திற்கு இப்படி ஒரு வெற்றியை அளித்த ரசிகர்களுக்கு படக்குழுவினர் சார்பாக நன்றிகள் பல, என டைரக்டர் பத்ரி கூறினார்.