< Back
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசிபலன் - 15.08.2024
இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் - 15.08.2024

தினத்தந்தி
|
15 Aug 2024 8:07 AM IST

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்

நட்சத்திரம்: இன்று காலை 10-30 வரை கேட்டைபின்பு மூலம்

திதி: இன்று காலை 07-04 வரை தசமி பின்பு ஏகாதசி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம்: மாலை 10-45 முதல் 11-45

ராகு காலம்: பிற்பகல் 1-30 முதல் 3-00

எமகண்டம்: காலை 6-00 முதல் 7-30

குளிகை: காலை 9-00 முதல் 10-30

கவுரி நல்ல நேரம்: காலை 12-15 முதல் 1-15

கவுரி நல்ல நேரம்: மாலை 6-30 முதல் 7-30

சூலம் தெற்கு

சந்திராஷ்டம் அஸ்வினி, பரணி

சூலம்தெற்கு

சந்திராஷ்டம் அஸ்வினி, பரணி

ராசிபலன்

மேஷம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் கிரே

ரிசபம்

தங்கள் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு தகுந்த பாடத்தை புகுத்துவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பர். தாங்கள் நினைத்தது பலிக்கும். அலுவலகத்தில் தங்கள அதிகாரிகள் பொறுப்புகளை ஒப்படைப்பர். விவசாயிகள் நிலப்பிரச்னையில் இருந்து விடுபடுவர். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

மிதுனம்

உத்யோகத்தில் உங்களுக்கு இன்று தங்கள் வேலைகளை முடித்து சீக்கிரம் வீட்டுக்குத் திரும்புவீர்கள். குடும்பத் தலைவிகளுக்கு தங்களுக்கு எதிராக செயல்பட்ட உறவினர்கள் மனங்கலங்குவர். அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

கடகம்

குடும்பச் சண்டையில் மூன்றாமவரை தாங்கள் ஈடுப்படுத்த வேண்டாம்.உடல் நலம் பொலிவடையும். கலைஞர்கள் எளிதில் கற்று தேர்ச்சியடைவர். வியாபாரிகளுக்கு நினைத்ததைவிட லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு விரும்பியவாறே திருமணம் கைகூடும். உத்யோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

சிம்மம்

கூட்டு வீயாபாரிகள் புதிய முதலீடு செய்வர். பிரிந்த நண்பர்கள் அன்பு பாராட்டுவீர்கள். தம்பதிகள் ஒற்றுமையுடன் வெளியூர் அல்லது வெளிநாடு சுற்றுப்பயணம் செய்ய நேரலாம். முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோஸதர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் கிரே

கன்னி

தாயாரின் உடல்நிலை பாதிக்கும். மருத்துவ செலவு உண்டு. எதிர்காலத்திற்காக நீங்கள் ஒரு சிறு தொகையை சேமிக்க துவங்குவர். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். அலுவலக விசயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். பணவரவுக்கு பஞ்சமில்லை. வியாபாரம் சூடு பிடிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

துலாம்

வெளிநாட்டிற்கு சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். திருமணம் பற்றிய பேச்சுவார்த்தை நடந்தேறும். அதற்குண்டான முயற்சிகள் நடக்கும். பிள்ளைகள் திறன் மேம்படும். காலம் தாழ்த்தாமல் சாப்பிடுங்கள். உறவினர்களிடமிருந்து உரிய நேரத்தில் உதவி கிடைக்கும். தேகம் பொலிவுறும்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

விருச்சிகம்

உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலையாக வெளியூர் பயணம் மேற்கொள்வர். எதிர்கால பயம் நீங்கும். துணையின் அன்பு நெகிழ்ச்சி தரும். விருப்பங்கள் நிறைவேறும். கிளைகள் துவங்குவீர்கள். புதிய நபர்களின் நட்பு ஏற்படும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். செலவுக்கேற்ப பணம் வரும். வியாபாரம் அபிவிருத்தியாகும்.

அதிர்ஷ்ட நிறம் பொன்னிறம்

தனுசு

மனைவியிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். விட்டுக் கொடுப்பதால் நன்மையே நிகழும். பழைய கடன்பாக்கியில் ஒரு பகுதி தீரும். அரசியல்வாதிகள் மக்கள் நலனில் அக்கறை கொள்வர். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். தொழிலார்களின் விருப்பம் நிறைவேறும். அலுவலக பணிகளில் ஆர்வம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்

மகரம்

வழக்கறிஞர்கள் கனவு நனவாகும். சில இழுத்துக் கொண்டிருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும்.ரசனைக்கேற்ப வீடு அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரம் சாதகமாக இருக்கும். தாய்வழி உறவினர்கள் ஆறுதல் தருவர். காதல் திருமணம் பிரச்னையைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம் கருநீலம்

கும்பம்

வியாபாரம் சிறப்பாக இருக்கும் சக ஊழியர்களிடம் நெருக்கம் கூடும். நண்பர்கள் நட்பு பாராட்டுவர். பெண்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிவிடுவர். வாகன செலவு உண்டு. எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும்.பணநெருக்கடி குறையும் மாறாக, பணம் தாராளமாக கிடைக்கும். உடல் நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் கிரே

மீனம்

தங்கள் அலுவலக மேல் அதிகாரி மாற்றப்படுவார். படிப்பிற்காக இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவர். வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வர். தேகத்தில் சிறிது உடல் தளர்வடையும். ஓய்வெடுப்பதன் மூலம் சரியாகும். பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

மேலும் செய்திகள்