இன்றைய ராசிபலன் - 31.07.2024
|12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் ஆடி மாதம் 15ம்-தேதி புதன் கிழமை
நட்சத்திரம் : இன்று பிற்பகல் 1.01 வரை ரோகிணி பின்பு மிருகசீரிடம்
திதி : இன்று மாலை 6.10 வரை ஏகாதசி பின்பு துவாதசி
யோகம் : சித்த யோகம்
நல்ல நேரம் காலை : 9.15 - 10.15
நல்ல நேரம் மாலை : 4.45 - 5.45
ராகு காலம் மாலை : 12.00 - 10.30
எமகண்டம் காலை : 7.30 - 9.00
குளிகை காலை : 10.30 - 12.00
கௌரி நல்ல நேரம் காலை : 10.45 - 11.45
கௌரி நல்ல நேரம் மாலை : 6.30 - 7.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் : அஸ்தம், சித்திரை
இன்றைய ராசிபலன்:
மேஷம்
உத்யோகத்தில் சலுகைகள் கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர்கள் வெளியூருக்குச் சென்று அங்கு பெரிய ஆர்டர்களை பெறுவர். ஏற்றம் காண்பர்.ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சிறப்பாக நடக்கும், வியாபாரத்தில் கொடுக்கல்–வாங்கல் சீராகும். மாணவர்களின் முயற்சி வெற்றி பெறும். உடலில் நோய் எதிர்ப்புசக்தி கூடும்.
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
ரிஷபம்
பண நடமாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வழக்குகளில் சாதகமானப் போக்கு தென்படும். மார்கெட்டிங் பிரிவினர் தங்கள் அலுவலகத்தில் உத்யோக உயர்வு கிட்டும். மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களில் முன்னேற்றம் காண்பர். உடலில் இருந்த கை, கால் வலி நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
வியாபாரம் சிறப்பாக காணப்படும். வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற முயற்சிகள் பலிதமாகும். பணப் புழக்கம் சரளமாகும். தம்பதிகளிடையே காதல் குறையாது. உணவு விசயத்தில் கவனம் தேவை. எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும். உடல் நலம் பெறும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கணவன்–மனைவி உறவில் மகிழ்ச்சி கூடும். அலுவலகத்தில் புதிய நபர்களின் வருகை இருக்கும். அவர்களிடம் கவனமாக பழகவும். வீட்டில் சுப விசேஷ காரியங்களில் சுறுசுறுப்புடன் வேலை பார்ப்பீர்கள். வேலையில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பர்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம்
சுப காரியங்கள் கூடி வரும். காய், பழ வியாபாரிகளுக்கு நேற்றை விட இன்று லாபம் அதிகரிக்கும்.சின்னத் திரை மற்றும் பெரிய திரை என்று சொல்லும் கலைஞர்களுக்கு வெற்றி குவியும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன்–மனைவி உறவு இனிக்கும். உடல் நலம் தேறும். பங்குச் சந்தையில் லாபத்தை எதிர்ப்பார்க்கலாம்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
இன்று உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய அனைத்துவிதமான காரியங்களை துவங்கலாம். ஆனால், அஸ்தம், சித்திரை நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும், தாங்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
தேவைக்கு ஏற்ப பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் இடையூறு அகலும். நன்கு படிப்பர். திருமண விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கலைஞர்களின் எண்ணங்கள் ஈடேறும். சைனஸ், ஆஸ்த்மா போன்ற சளி தொந்தரவுகள் நீங்கும். கணவன்–மனைவி உறவு தித்திக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
எதிரிகள் விலகி ஓடுவார்கள். கூட்டு வியாபாரிகளுக்கு தங்களின் கூட்டுத்தொழிலில் ஏற்றம் உண்டாகும். நண்பர்களின் நிலை உயரும். அவர்கள் தங்களுக்கு தக்கச் சமயத்தில் உதவுவர். உத்தியோகத்தில் வெளியூருக்கு மாற்றலாவர். திருமணக் காரியங்களில் நல்ல தீர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
உத்யோகஸ்தர்களுக்கு போனஸ் கிடைக்கும். சிறு வயது நண்பர்களை மீண்டும் சந்திப்பீர்கள். வீட்டில் அமைதி நிலவும். தொழிலாளர்களுக்கு தங்கள் கோரிக்கை நிறைவேறும். தங்கள் நட்பினை புதுப்பிப்பீர்கள். தேகம் பலம் பெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினர் வெற்றி நடைபோடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
மகரம்
புதிய ஆடை, அணிமணிகளை தள்ளுபடி விலையில் வாங்குவீர்கள். கணவன்–மனைவி உறவில் மகிழ்ச்சி கூடும். அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர். காதலர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்து வரும். அலுவலகப் பணியாளர்கள் நிலை உயரப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிகள் குவிப்பர். வியாபாரிகளுக்கு விற்பனை கூடி நல்ல லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு அலுவலக சம்பந்தமாக வெளியூர் பயணம் நேரிடும். தம்பதிகளிடையே அன்புப் பலப்படும். உடல் நலத்தில் கால் பாதங்களில் வலி வந்து போகும்.
அதிர்ஷ்ட நிறம் : கிரே
மீனம்
பிள்ளைகளுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் எதிர்பார்த்த காரியத்தில் வெற்றியைப் பெறுவீர்கள். திருமணமானதிலிந்து பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் இணைவர். பிள்ளைகளுக்கு நல்ல ஞாபகத் திறன் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்