இன்றைய ராசிபலன் - 30.07.2024
|12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் ஆடி மாதம் 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை
நட்சத்திரம்: இன்று பிற்பகல் 01.40 வரை கிருத்திகை பின்பு ரோகினி
திதி: இன்று மாலை 07.30 வரை தசமி பின்பு ஏகாதசி
யோகம்: சித்த, அமிர்த யோகம்
நல்ல நேரம் காலை: 10.45 - 11.45
நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45
ராகு காலம் மாலை: 03.00 - 04.30
எமகண்டம் காலை: 09.00 - 10.30
குளிகை மாலை: 12.00 - 1.30
கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11-45
கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டம்: உத்திரம், அஸ்தம்
இன்றைய ராசிபலன்:
மேஷம்
பணவரவு நன்றாக இருக்கும். உங்கள் கீழ் வேலை பார்ப்பவர்கள் இதுநாள் வரை தங்களிடம் ஏமாற்றிக் கொண்டிருந்தவர் பிடிபடுவார். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். வெளியூர் செல்வீர்கள். கலைஞர்களுக்கு வர வேண்டிய பாக்கி தொகை வந்து வரும். தேவையில்லாத மனபயம் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
ரிஷபம்
மனம் அலைபாயும். சிந்தனைகள் ஒரு நிலையில் இருக்காது. ஆதலால், யோகா நன்மை தரும். பணம் நாலாபக்கமிருந்தும் வரும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நட்பைப் பெறுவர். பிள்ளைகளின் நடவடிக்கையில் கவனம் தேவை. அவர்களுடன் நேரத்தை செலவழிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மிதுனம்
தெரியாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பைப் பெறுவர். அரசு அதிகாரிகள் ரகசியத்தை காப்பர். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். நல்ல விளைச்சல் உண்டாகும். வாங்கிய கடனை அடைத்து இன்புறுவீர்கள். சமூகசேவையில் மனம் ஈடுபடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கடகம்
உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாக பொறுப்புகள் கூடும். உங்கள் நேர்மையால் சம்பள உயர்வு உண்டு. அரசியல்வாதிகளுக்கு அலைச்சல்கள் கூடும். மாணவர்கள் திட்டமிட்டு படிப்பர். வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் அதிகம் கிடைக்கும். அதிக பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
சிம்மம்
எதிர்பாராத செலவு உண்டாகும்.கவலை வேண்டாம் அதற்கேற்ப தங்களுக்கு பணம் வந்து சேரும். வியாபாரிகள் லாபம் ஈட்டுவார்கள். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆதலால், மௌனத்தை கையாண்டு அதிக இடைவெளியை தவிர்க்கலாம். உறவினர்கள் நல்ல செய்தியுடன் வருவர். உடல் நலம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கன்னி
இன்று சித்திரை, சுவாதி நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய அனைத்துவிதமான காரியங்களை துவங்கலாம். ஆனால், உத்திரம், அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும், தாங்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
துலாம்
பணம் பல வழிகளில் தேடி வரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கலைஞர்களுக்கு முக்கிய வேடங்கள் கிடைக்கும். பெண்கள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். காதலர்கள் திருமணத்துக்கு தயாராவர். மூத்த சகோதரியினால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
விருச்சிகம்
கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். பேச்சாளர்களுக்கு பாராட்டும்,மதிப்பும் கூடும். கணினி துறையைச் சேர்ந்தவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவுவர். கைத் தொழிலில் நல்ல செழிப்பு உண்டாகும். அதிக வாடிக்கையாளர்களும், அதிக ஆர்டர்களும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
தனுசு
வழக்கில் திருப்பம் ஏற்படும். நீண்ட நாள் ஆசையான சொந்த வீடு வாங்கும் முயற்சி பலிக்கும். பெண்கள் சிக்கனத்தை கையாண்டு செலவுகளை குறைத்துக் கொள்வர். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். கலைஞர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
மகரம்
கணினித் துறையில் உள்ளளவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். உங்கள் எதிர்காலத்தை பற்றிய முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். பணவரவு அதிகரிக்கும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. கை, கால் வலி வந்துப் போகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கும்பம்
கலைஞர்களுக்கு புதிய பட ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். நீங்கள் பார்த்த இடம் அல்லது வீட்டினை தாங்கள் வாங்கும் முயற்சி வெற்றி தரும். பெண்கள் தங்கள் கணவரிடம் அனுசரிப்பது நல்லது. பிடித்த பொருட்களை வாங்கி மனமகிழ்ச்சியில் ஆழ்வீர்கள்.தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மீனம்
பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். உறவினர்களின் வழியில் செலவு உண்டாகும். தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நெருங்கிய நண்பர்கள் நட்பு பாராட்டுவார்கள். பெற்றோர்களுக்கு பிள்ளைகளால் நன்மைஉண்டு. உங்கள் வட்டாரத்தில் மதிப்புக் கூடும். திடீர் பயணம் உற்சாகம் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்